இறுதி வாரத்தில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்தது தெரியுமா.! வெளியான தகவல்.!

0
20789
bigg-boss

இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற முகெனை தவிர மற்ற 5 போட்டியாளர்களும் நேரடியாக இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றனர். இந்த வாரம் முழுக்க நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் வழக்கம்போல கவின் தான் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருந்து வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக பிக்பாஸ் அறிவித்த 5 லட்சம் பரிசுத் தொகை எடுத்துக்கொண்டு கவின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

bigg-boss

இதனால் மீதமிருந்த சாண்டி ஷெரின் தர்ஷன் லாஸ்லியா ஆகியோருக்கு கடும் போட்டி நிலவி வந்தது. இதில் ஆரம்பம் முதலே சாண்டி மற்றும் லாஸ்லியாவிற்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்த வண்ணம் இருந்தது. இதனால் கடைசியில் இருந்த செரின் மற்றும் தர்ஷனுக்கு தான் தொடர்ந்து போட்டி நிலவி கொண்டே வந்தது. பலரும் ஷெரின் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பாருங்க : இறுதி வாரத்தில் யாரும் எதிர் பாராத விதத்தில் வித்யாசமாக நடந்த எலிமினேஷன்.! எப்படி தெரியுமா?

- Advertisement -

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நடத்திய வாக்கெடுப்பில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்தது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது அதில்,

  • லாஸ்லியா – 6,88,73,862
  • சாண்டி – 5,21,76,675
  • ஷெரின் – 5,57,94,131
  • தர்ஷன் – 5,21,76,675

எனவே, தற்போது வந்த இந்த தகவலின்படி ஷெரின் மற்றும் தர்ஷன் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது போல தெரியவில்லை இருப்பினும் தர்ஷன் வெளியேறியுள்ளது பிக்பாஸ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் மீது இருந்த நம்பிக்கை பெரிதும் குறைந்துள்ளது வெளியேறியதால் என்ற அஷ்ட கை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement