இறுதி வாரத்தில் யாரும் எதிர் பாராத விதத்தில் வித்யாசமாக நடந்த எலிமினேஷன்.! எப்படி தெரியுமா?

0
12053
bigg-boss
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.இன்னும் 7 நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிந்துவிடும். மேலும், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கவின் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில் கவின் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர்.

இதையும் பாருங்க : வெளியேற்றபட்ட தர்ஷன்.! ட்ரெண்டிங்கில் வந்த விஜய் டிவிக்கு எதிரான மோசமான ஹேஷ் டேக்.!

- Advertisement -

மேலும் இந்த வாரம் நடைபெற்ற இந்த ஒட்டிங்கில் வழக்கம்போல கவின் தான் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கவின் வெளியேறி இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. நேற்றய நிகழ்ச்சியில் சாண்டி மட்டும் காப்பற்றபட்டதாக கமல் அறிவித்திருந்தார்.

இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்கள் முன் இறுதி போட்டிக்கு செல்வதற்கான மெடலை போட்டியாளர்கள் முன் வைத்து அதனை ஒவ்வொருவருவராக அணிய செய்துள்ளார் . முதலில் சாண்டி மெடலை அணிந்த பின்னர் லாஸ்லியா மற்றும் ஷெரின், மெடலை அணிந்து கொள்கின்றனர் . இறுதியாக தர்ஷன் இந்த வாரம் வெளியேறியுள்ளார் என்றுவுடன் அரங்கமே அமைதியில் ஆழ்ந்தது அதில் ஒரு சிலர் கண்கலங்கினர்.

-விளம்பரம்-
Advertisement