பிக் பாஸ் நிகழ்ச்சி 9 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை சென்ற எபிசோடுகள் மூலம் யார் யார் என்ன கேரக்டர் என்பதை பார்வையாளர்கள் ஓரளவிற்கு உறுதி செய்து விட்டனர். இந்த நிலையில் பிரபல நடிகர் பொன்னம்பலம் இந்த சீசனில் பைனலிஸ்ட் யார் என்பதை கூறியுள்ளார்.
பொன்னம்பலம், தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர்.
இதையும் பாருங்க : மீராதா கொழப்பிடா.! என்ன நடிப்புடா சாமி.! கவினிடம் புலம்பிய சாக்க்ஷி.! நீக்கப்பட்ட காட்சி இதோ.!
சினிமாவில் பல புதிய வில்லன் நடிகர்களின் வருகையால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்தது. அதனால் ஒரு சில சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் பொன்னம்பலம் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பொன்னாபலம், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன், லாஸ்லியா, சரவணன், வனிதா ஆகியோர் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று கூறியுள்ளார். அதிலும் லாஸ்லியாவிற்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார் என்றும் அவருக்கு இலங்கை தமிழர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள் என்றும் கூறியுள்ளார் பொன்னம்மபலம்.