பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வந்தது உண்மை தான்.! முதல் போட்டியாளர் என்று கூறப்படும் சாந்தினி தகவல்.!

0
726
Bigg-Boss-Chandini
- Advertisement -

இந்தியில் 12 சீசன்களை கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழில் 3 வது சீசனை எட்டியுள்ளது. தமிழ்த் தொலைக்காட்சி உலகில் 2017-ல் அறிமுகமாகி பலத்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’. புதிய பரிமாணத்தில் ஆங்கராக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் கமல்ஹாசன்.

-விளம்பரம்-

முதல் இரண்டு சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பானது போல மூன்றாவது சீஸனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும், இந்த சீசனை தொகுத்து வழங்க போவது யார் என்று பல குழப்பங்கள் இருந்த நிலையில் மூன்றாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக பல்வேறு பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினி தமிழரசன் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து பேசிய சாந்தினி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னை கலந்து கொளவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான். ஆனால், இன்னும் நான் கலந்துகொள்வது உறுதியாகவில்லை. இப்போதைக்கு நான் மிகவும் நெருக்கடியான பணி சுமையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement