இந்த வாரம் வெளியேறியது இவர் தான் – இவர நீங்க எதிர் பார்த்தீங்ங்களா ?

0
105255
kamal

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமானநிறைவு செய்ய இருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் அன்பு, சண்டை, கொஞ்சம் ரொமான்ஸ், புது புது உறவுகள் பல பஞ்சாயத்துக்கள் அரங்கேறி இருந்தது. நாளுக்கு நாள் பிக் பாஸின் சுவாரசியம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. கடந்த வாரம் நாமினேஷனில் பாலாஜி, சுரேஷ், சக்ரவர்த்தி, ஆஜீத், அனிதா சம்பத், ஆரி ஆகியோர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஜீத் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

This image has an empty alt attribute; its file name is 1-189-430x1024.jpg

ஆனால், ஆஜீத் தன்னிடம் இருந்த ‘ஏவிக்ஷன் ப்ரீ பாஸ்’ ஐ வைத்து தப்பித்துவிட்டார். அஜீத் ‘ஏவிக்ஷன் ப்ரீ பாஸ்’ ஐ வைத்து தப்பித்து விட்டதால், ஆஜீத்திற்கு அடுத்தபடியாக குறைவான வாக்குகளை பெற்ற அனிதா சம்பத் அல்லது சுரேஷ் சக்ரவர்த்தி இருவரில் யாரவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் யாரும் எலிமினேட் ஆகவில்லை என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் கமல்.

- Advertisement -

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஷிவானி, அர்ச்சனா, ஆரி, கேப்ரில்லா, சம்யுக்தா ஆகிய 5 பெயரை தவிர பாலாஜி, சோம் சேகர், நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ, வேல் முருகன், சுரேஷ், அனிதா, ஜித்தன் ரமேஷ், ஆஜித்,சனம் ஆகிய 11 பேரும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதற்கான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் பாலாஜிக்கு தான் அதிக வாக்குகள் பதிவாகி இருந்ததாம், இவரை தொடர்ந்து ரம்யா பாண்டியன், ரியோ, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று டாப் 5 இடத்தை பிடித்து விட்டார்களாம். இந்த வாரம் கடைசி மூன்று இடத்தில் ஆஜீத், சனம், வேல்முருகன் ஆகியோரில் வேல்முருகன் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று இந்த வாரம் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement