சினிமாவ விட்டுட்டு எதுக்கு இப்படி சில்ர தனமா சீரியல்ல நடிக்கிறீங்க – கேலி செய்த நபர்களுக்கு கேபி கொடுத்த பதிலடி.

0
315
gabe
- Advertisement -

சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நாம் பார்த்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்கள். பேபி ஷாலினி, மீனா என எத்தனையோ குழந்தைகள் சினிமாவில் பிரபலமாக இருந்தார்கள். அதேபோல சின்னத்திரையிலும் பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்கள். அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா சார்ல்டன். இவர் விஜய் தொலைக்காட்சி மூலம் தான் மக்களுக்கு பரிச்சியமானார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிகம் ஆர்வம் இருந்ததால் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

பின் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டத்தை வென்ற இவருக்கு சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் நடித்தார். பின் தனுஷின் 3 உட்பட சில படங்களில் நடித்து உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரில்லா சின்னத்திரையில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று இருந்தார்.

- Advertisement -

ஈரமான ரோஜாவே சீரியல்:

அந்த வகையில் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கேபி நடனம் ஆடி இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் மலராக பவித்ரா நடித்திருந்தார். வெற்றியாக புதுமுக நடிகர் திரவியம் நடித்திருந்தார்.

ஈரமான ரோஜாவே சீரியல் 2 தொடக்கம்:

இவர்களுடன் வெற்றியாக சியாம், சாய் காயத்ரி, பிரேமலதா, பிரவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. அதில் கதாநாயகியாக கேபி நடித்து இருக்கிறார். மேலும், கேப்ரில்லா நடிக்கும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் ப்ரோமோ வெளியாகியிருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

கேபி நடிக்கும் புது சீரியல்:

gabb

இதனிடையே இவர் அடிக்கடி நடத்திய போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்நிலையில் ரசிகர் ஒருவர் கேப்ரில்லாவிடம் கேள்வி ஒன்று கேட்டு இருக்கிறார். அதில் அவர் நீங்கள் ஏன் சீரியலில் நடிக்க ஒத்துக் கொண்டீர்கள்? சின்னதாக யோசிக்காதீர்கள். உங்களுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று கூறி இருக்கிறார். உடனே இதை பார்த்த கேப்ரில்லா கூறியது, நான் சின்னதாக யோசிக்கிறேன் என்று நினைத்தாள் இந்த கேலி உங்களுக்கு தான் பொருந்தும்.

இன்ஸ்டாவில் பதிலடி கொடுத்த கேபி:

eeswsw

சின்னத்திரை, பெரியதிரை எல்லாம் ஒரு தளம் தான். ஒரு நடிகராக எங்களின் உழைப்பை அதில் கொடுப்போம். ஒவ்வொருநாளும் அனைவரின் வீட்டிற்கும் சென்று வருவது சின்ன விஷயம் கிடையாது’ என்று கூறியுள்ளார். அதேபோல இது குறித்து மற்றொரு பதிவை போட்டுள்ள கேப்ரில்லா இ’ன்னும் யாராவது ஒருவர் இதுபோன்ற கேள்வி கேட்டாலோ அல்லது என்னுடைய முடிவை நினைத்து சிரித்தாலோ அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, உங்களின் கருத்தை நான் கேட்டேனா, இல்ல நீங்கள் செய்யும் வேலையை பற்றி நான் பேசினேனா, வாழ விடுங்கள்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement