என்னங்கடா இது, கட்டாயம் அழ வேண்டுமா ? கேப்ரில்லாவின் கதையை கலாய்த்த பிரபல நடிகர்.

0
2597

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர்களின் ஒருவராக இருக்கும் நபர்களில் கேப்ரில்லாவும் ஒருவர். 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்த இவர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அப்பா படத்திலும் நடித்திருந்தார்.

நான் என்னுடைய ஆறாம் வகுப்பிலேயே விஜய் டிவியில் நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றேன். ஆனால் நான் அனைவரிடமும் சகஜமாக பேச மாட்டேன் என்னிடம் சகஜமாக பேசுபவர்களிடம் நன்றாக பழகுவேன். ஆனால், அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கு பின்னர் எனக்கு எந்த ஒரு பிரபலமும் கிடைக்கவில்லை. என்னை சின்ன வயதில் இருந்தே நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று சொல்லி சொல்லி வெறுத்துப் போய்விட்டேன்.

- Advertisement -

என்னுடைய உடம்பை பார்த்தால் எனக்கே பிடிக்காமல் கூட போயிருக்கிறது நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒன்லி என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அதற்காகவே நான் நிறைய இடம் போகாமல் இருந்திருக்கிறேன. நண்பர்கள் அழைத்தால் கூட வெளியில் செல்லாமல் இருந்திருக்கிறேன். இதனால் என் மீது இருந்த என்னுடைய தன்னம்பிக்கை குறைந்து கொண்டே போனது. இதனால் தான் எனக்கு வாய்ப்புகள் வரவில்லையே என்று நினைத்து, கடைசியில் கடந்த ஆண்டுதான் ஜிம்முக்கு எல்லாம் போய் என்னுடைய உடலை ஏத்தினேன் என்று கூறியிருந்தார்.

Sathish-Krishnan

இப்படி ஒரு கேப்ரில்லாவின் பேச்சை கலைத்துள்ள பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சதிஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஓன்றை போட்டுள்ளார். அதில், என்னய்ய இதுதான் கேப்ரில்லவின் கதையா, என்னங்கடா இது நான் ஏதோ ஒரு க்யூட்டான கவலை இல்லாத ஒரு கதையை எதிர்பார்த்தேன். மனவலி கதையை சொல்லி கண்டிப்பாக அழ வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா ரேகா மேடம் அட்வைஸ் வேற நோ கமெண்ட்ஸ்.

-விளம்பரம்-
Advertisement