விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ரியோ, நிஷா, ரம்யா பாண்டியன், ஆஜித் என்று விஜய் டிவிக்கு ஏற்கனவே பரிச்சயமான பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் கேப்ரில்லா தான் ஷிவானிக்கு பின்னர் இளசுகளை கவர்ந்து வரும் ஒரு போட்டியாளராக திகழ்ந்து வருகிறார். விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கேப்ரில்லாவை கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவியில் பார்க்க முடியாமல் தான் இருந்தது.
சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி நாம் பார்த்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்கள் பேபி சாரி பேபி எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார்கள் அதேபோல சின்னத்திரையிலும் பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் அந்தவகையில் கப்ரில்லோ சார்ல்டன் ஒருவர். இவர் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சி மூலம் தான்.விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் நடனத்தில் ஆர்வம் உள்ள நபர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் ஜோடி என்ற நடன நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் கேப்ரில்லா. 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், தனுஷ் நடித்த ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்திருந்தார்.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை பார்த்த போது பலரும் ‘3’ படத்தில் வந்த குட்டிப்பொண்ணா இது என்று வியப்படைந்தார்கள். பிக் பாஸ் வீட்டில் நடிகை கேப்ரில்லா அணிந்து வரும் ஆடைகள் கூட கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் கேப்ரில்லா போட்டிருந்த ஆடை ஷிவானியுடையது தான். ஏற்கனவே கடந்த அக்டோபர் 30 நடைபெற்ற பேஷன் ஷோ டாஸ்கில் கேப்ரில்லா, ரம்யா பாண்டியனின் ஆடையை போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.