லாக்டவுனால் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய கணேஷ் வெங்கட்ராமன்.

0
18688
ganesh
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஒரு மாடலும் ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு நடந்த மிஸ்டர் இந்தியா 2003 என்ற போட்டியில் வெற்றி பெற்றார். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த அபியும் நானும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் உன்னைப்போல் ஒருவன், கோ, பனித்துளி, தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பிறகு இவர் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஆகவும் கலந்து கொண்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கணேஷ் மக்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். இவர் 2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த நடிகை நிஷா கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : ஜெயலலிதாவாக நடிப்பதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு. டாப் ஹீரோயினை விமர்சித்த மீரா மிதுன்.

- Advertisement -

இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகளின் பிறந்தநாள் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கணேஷ் வெங்கட்ராம்- நிஷா அவர்களின் மகளின் முதல் பிறந்தநாள். இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் தனது குடும்பத்தினருடன் அவரது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.

தனது மனைவி நிஷா மற்றும் மகள் சமைரா மற்றும் தன் குடும்பத்துடன் கணேஷ் வெங்கட்ராம் சந்தோஷமாக இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த பிறந்தநாள் முதல் தன் மகள் சிறகடித்து பறக்க உந்தித்தள்ளும் காற்றாக இருக்க விரும்புகிறேன் எனவும் அவர் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement