ஜெயலலிதாவாக நடிப்பதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு. டாப் ஹீரோயினை விமர்சித்த மீரா மிதுன்.

0
1117
meera
- Advertisement -

பிக் பாஸ் மீரா மிதுனை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு பெயர் போனவர். மீரா மிதுன் திரைப்பட நடிகை ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியின் வெற்றியாளர் ஆவார். ஆனால், அந்த வெற்றியை மீண்டும் அவரிடம் இருந்து பரித்து விட்டார்கள் என பல சர்ச்சைகள் எழுந்தது. கடந்த ஆண்டு விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது, சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது என பல வேலைகளை செய்து வந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் பிரபல நடிகைக்கு அந்த தகுதியே கிடையாது! என்று கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார் பிக்பாஸ் மீரா மிதுன். ஹிந்தியில் மிக பிரபலமான நடிகை கங்கனா ரணாவத். இவர் தற்போது தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான “தலைவி” படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இப்படம் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதையும் பாருங்க : வெண்ணிலா கபடிக்குழுவில் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இவங்க ரெண்டு பேர் தான் – இயக்குனர் பேட்டி.

- Advertisement -

சமீப காலமாக நடிகை கங்கனா அவர்கள் தன் கருத்துக்களால் சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்மையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புட் தற்கொலை குறித்து நடிகைகள், நடிகர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்தை கண்டித்து கங்கனா பேசியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் இருந்தனர். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழ் திரையுலகில் இருக்கும் நடிகை, தமிழ் அரசியல் சாம்ராச்சியம் உள்ள ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு கங்கனாவை தேர்வு செய்தது தவறு.

ஜெயலலிதாவாக நடிக்க சிறிதும் பொருத்தமில்லாதவர் கங்கனா என கடுமையாக விமர்சித்துள்ளார் மீரா மிதுன். சமீபத்தில் இவர் தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் தமிழக அரசை பிரதமர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதோடு தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் கொரோனாவை தமிழகத்தில் இருந்தே விரட்டுவேன் என்று மீரா பதிவிட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பையும்,சர்ச்சையும் கிளப்பி இருந்தது.

-விளம்பரம்-
Advertisement