ஹோட்டலில் டென்க்ஷன் ஆகி, சப்ளையரை அறைந்த கஞ்சா கருப்பு – வைரல் வீடியோ.

0
474
kanja
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் கஞ்சா கறுப்பு. இவருடைய உண்மையான பெயர் கறுப்பு ராஜா. இவர் மதுரையை சேர்ந்தவர். இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்த பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக கறுப்பு நடித்திருந்தார். இதனால் அவரை அனைவரும் கஞ்சா கருப்பு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ்மகன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தை தயாரித்து நஷ்டமடைந்த கஞ்சா கருப்பு :

இதனை தொடர்ந்து தான் சம்பாதித்த பணத்தை வைத்து படம் ஒன்றை தயாரித்து இருந்தார் கஞ்சா கருப்பு. சினிமா துறையில் பல படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் இறக்கி மொத்த பணத்தையும் இழந்த நடிகர்கள் வரிசையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்புவும் ஒன்று. இவர் ‘வேல்முருகன் போர்வெல்’ என்று படத்தை தயாரித்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸுக்கு பின் ரீ – என்ட்ரி :

இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது கூட பலருக்கும் தெரியாது. இதனால் மனம் உடைந்த கஞ்சா கறுப்பு கொஞ்ச காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய பிராங்க் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

சப்ளையருக்கு பளார் விட்ட கஞ்சா கருப்பு :

பொதுவாகவே சோசியல் மீடியாவில் புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சியை எடுத்து வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிராங்க் நிகழ்ச்சியும் ஒன்று தான். இந்த நிகழ்ச்சி பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை என பலரையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஏமாற்றி வீடியோவாக எடுப்பார்கள். இதனால் இதை சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் ஆத்திரம் அடைந்து கோபப்படுகிறார்கள்.

-விளம்பரம்-

பிராங்கால் டென்ஷன் ஆன கஞ்சா கருப்பு :

அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி நிகழ்ச்சியினால் பல பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட இந்த மாதிரி பிராங்க் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். இந்த நிலையில் கஞ்சா கருப்பு தன் நண்பருடன் தெரிந்த ஓட்டலுக்கு உணவு சாப்பிட சென்றிருக்கிறார். அங்கு பிராங்க் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குழு தேவையில்லாமல் கஞ்சா கறுப்பையும், அவருடைய நண்பரையும் வம்பு இழுத்து இருக்கிறார்கள்.

கட்ட எறும்பு prank :

இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா கருப்பு அவர்களை சரமாரியாக திட்டி அடி வெளுத்து வாங்கி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை நெட்டிசன்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த மாதிரி தேவை இல்லாமல் ஒரு நபரின் மனம் வேதனை படும் அளவுக்கு நிகழ்ச்சியை நடத்த கூடாது என்றும் கண்டித்து வருகின்றனர்.

Advertisement