கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ் கடவுள் முருக பெருமானை இழிவுபடுத்தும் விதத்தில் ‘கந்த சஷ்டி” பாடலை கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்ட ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடுயூப் சேனல் பெரும் சர்ச்சையில் சிக்கி இருந்தது. கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப்  சேனலை விமர்சித்தும்,  அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கருப்பர் கூட்டம் யூடுயூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த சர்ச்சைக்கு பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்துவந்தனர். நடிகர் பிரசன்னா, நட்டி நாகராஜ், திரௌபதி இயக்குனர் மோகன், ராகவா லாரன்ஸ், வரலக்ஷ்மி சரத்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜ் கிரண் போன்ற பல்வேறு திரை பிரபலங்கள் கூட கறுப்பர் கூட்டத்தின் விடீயோவிற்கு கண்டனம் தெரிவித்தனர். அவ்வளவு ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இதற்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட .

Advertisement

மேலும், பல்வேறு தரப்பினரும் கறுப்பர் கூட்டம் தரப்பினர் மீது வழக்கும் பதிவு செய்தனர். இந்தப் புகாரில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சேனலின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

இப்படி ஒரு நிலையில் முருகப்பெருமானை தொடர்ந்து சிவ பெருமான் குறித்து இழிவாக பேசி யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நபரால் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் சிவ பெருமான் ஆடும் ஆட்டத்தை படு ஆபாசமாக சித்திரத்து அந்த நபர் பேசி இருக்கிறார். இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் பல சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவத்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் நடிகை காயத்ரி ரகுராம் ‘U2brutus அந்த சேனலையும், இந்து கடவுளையும் அசிங்கப்படுத்தும் நபரை திமுக அரசு கைது செய்யப் போவதில்லை என்றால், திமுக என்றென்றும் இந்துக்களுக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது. அந்த கட்சியில் உள்ள இந்துக்கள் திமுக கட்சியுடன் தொடர்பு கொள்வதில் அர்த்தமில்லை.திமுக மதவாத மறைமுக தாக்குதல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

அதே போல இந்த வீடியோவை பகிர்ந்துள்ள Jsk கோபி ‘திமுகவில் பல லட்சம் இந்துக்கள் உள்ளனர்.அதில் சிவ பக்தர்கள் நிறைய பேர் உள்ளனர்.. ஒருத்தருக்கு கூடவா இவன் பேசுவதை பார்த்து ரத்தம் கொதிக்கவில்லை. திமுக வில் உள்ள இந்துக்களே உங்கள் பக்தி உண்மையாக இருந்தால் இவன் மீது நடவடிக்கை எடுக்க உங்கள் கட்சி தலைவர் முதல்வர் என்று பதிவிட்டுள்ளார். ‘அந்த பதிர்விற்கு கமன்ட் செய்துள்ள , ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய ஜி மோகன் ‘அசிங்க அசிங்கமா பேச தோனுது இவனுங்க பிறப்பை பற்றி.. நாகரீகம் கருதி எதுவும் வெளிப்படையா பேச முடியல’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement