அதிமுக கட்சியில் இணைந்த சில மாதத்தில் காயத்ரி ரகுராமுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் ஆவார். காயத்ரி ரகுராம் அவர்கள் நடிகை மட்டும் இல்லாமல் நடன இயக்குனரும் ஆவார். இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.
அதற்கு பின் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். இருந்தாலும், இவருக்கு பெரியதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் இவர் அரசியலில் குதித்தார். அதன் பின் காயத்திரி BJP கட்சியில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் BJP யில் இருந்தாலும் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இவர் தமிழ் நாட்டு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருந்தார்.
காயத்ரி ரகுராம் அரசியல்:
குறிப்பாக, காயத்ரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. அதோடு கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது. இதனால் இவரை பாஜகவில் இருந்த பதவியில் இருந்து நீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. பின் மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும், காயத்திரி ரகுராமுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தது.
காயத்ரி ரகுராம் குறித்த சர்ச்சை:
இது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கோபம் அடைந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகினார். இருந்தும் அண்ணாமலை குறித்து விமர்சித்து இருந்தார். தற்போது காயத்ரி ரகுராம் அவர்கள் அதிமுக எடப்பாடி கட்சியில் சேர்ந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் காயத்ரி ரகுராமுக்கு கட்சியில் மகளிர் அணி துணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்க கழகத்தின் மகளிர் அணி துணைச் செயலாளராக என்னை நியமித்து இருக்கும் கழக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் கழகத்தை நடத்திச் செல்லும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அய்யா அவர்களின் பொற்கரங்களில் கழகத்தின் மகத்தான வெற்றியை சமர்பிப்போம்.