துரதிர்ஷ்டவசமாக பட்டியலில் இப்படி சேர்த்துவிட்டனர் – ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த தாதா சாகிப் விருது குறித்து காயத்ரி ரகுராம்.

0
933
jaibhim
- Advertisement -

ஜெய் பீம் திரைப்படத்திற்கு இரண்டு தாதா சாகேப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம். மேலும், படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது.

- Advertisement -

ஆஸ்காரில் நிராகராகப்பட்ட ஜெய் பீம் :

இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதேசமயம் இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இருப்பினும் இந்த படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

தாதா சாகேப் பால்கே விருது :

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் ’ஜெய் பீம்’ படத்துடன் சேர்த்து மொத்தம் 276 படங்கள் போட்டியிட்டன. இந்தப் படங்களில் 10 படங்கள் மட்டும் ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு தேர்வாகின. இதில், ‘ஜெய் பீம்’ இடம்பெறவில்லை. நிச்சயம் ஆஸ்கர் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெய் பீம்’ இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்த தினமான ஏப்ரல் 30-ம் தேதியை முன்னிட்டு, வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். அதன்படி, 12-வது தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.  இந்த விழாவில், நடிகர் சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளது.

மணிகண்டனுக்கு விருது :

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், ‘ஜெய்பீம்’ படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ராசாக் கண்ணு கதாபாத்திரத்தில், மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் பா ஜ க நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்.

காயத்ரி ரகுராம் அதிருப்தி :

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படத்திற்கு, சிறந்த துணை நடிகருக்கான ராஜா கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கு விருதும் கிடைத்துள்ளது. நிஜ வாழ்க்கையிலும், படத்திலும் ராஜா கண்ணு முக்கிய நாயகன், துணை வேடம் அல்ல. வாழ்த்துக்கள் மணிகண்டன்.அந்த கதாபாத்திரம் இல்லாத கதை இல்லை. துரதிர்ஷ்டவசமாக திரைப்பட நிறுவனம் அவரது பெயரை துணை பாத்திரப் பட்டியலில் சேர்த்துள்ளது.’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement