இந்தி தெரியாது போடா டி-ஷர்ட். சாந்தனு மற்றும் அவரது மனைவியை கலாய்த்த காயத்ரி ரகுராம்.

0
4139
gayathri
- Advertisement -

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மும்மொழி கல்வி விவகாரம் பெரும் பஞ்சாயத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த மும்மொழி கொள்கை விவகாரம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.

-விளம்பரம்-

பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சமீபத்தில் கூட தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் கூட #இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் கூட கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரெண்டிங்கில் வந்தது.திமுக போன்ற பல்வேறு கட்சியினர் இந்த இந்தி எதிர்ப்பு பிரச்சனையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி மற்றும் தொகுப்பாளினியுமான கிகியும் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். அதனை கிண்டல் செய்யும் வகையில் நடன இயக்குனரும் பா ஜ க பிரமுகருமான காயத்ரி ரகுராம், என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement