பா ஜ க புதிய நிர்வாகிகள் பட்டியல், பறிக்கப்பட்ட காயத்ரி ரகுராமின் பதிவு – நேற்று முதல் 30கும் மேற்பட்ட டீவீட்டை போட்டு தள்ளியுள்ள காயத்ரி ரகுராம்.

0
491
gayathri
- Advertisement -

கோவில் கோவிலாக படி ஏறியும் எந்த கடவுளும் காயத்திற்கு கைகொடுக்கவில்லை என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக இருப்பவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு இவர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு 2019ஆம் ஆண்டு முதல் இவர் பல்வேறு படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

பிறகு 2020ல் காயத்திரி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் காயத்ரி ரகுராம் பதவி பறி போய் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் கலை கலாச்சார பிரிவில் இருந்து மாநில செயலாளர்கள் சிலரை நீக்குவதாக அப்பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் தனது லெட்டர் பேடில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், தனது அணியில் சில நிர்வாகிகள் செயல்பாடின்றி இருப்பதாகவும், சிலர் அணியின் தலைமைக்கு எதிராக செயல்படுவதால் கட்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது.

- Advertisement -

காயத்திரி நீக்கிய நபர்கள்:

மேலும், நீக்கப்பட்டவர்களுக்கு கட்சியில் வேறு பதவிகள் கிடைக்கும் அந்த அறிவிப்பில் காயத்ரி ரகுராம் கூறியிருந்தார். இதனை அடுத்து திரைத்துறையில் பிரபலங்களான ஃபெப்சி சிவா, தயாரிப்பாளர்கள் அழகன் தமிழ்மணி, பாபு கனேஷ், உமேஷ் பாபு, விருகை வெங்கடேஷ், சர்மா உட்பட பலர் நீக்கப்பட்டனர். இது பலருக்கும் பிடிக்கவில்லை. அதோடு மாநில அளவில் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் தேசிய தலைமையின் ஒப்புதலுடன் தான் நடக்க வேண்டும் என்பது கட்சியின் விதிமுறை. ஆனால், காயத்ரி ரகுராம் தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகிகளை நீக்கியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

காயத்திரி நியமித்த நபர்கள்:

அதுமட்டுமில்லாமல் ஜனனி நாராயணன், ஜனனி கிருஷ்ணமூர்த்தி, ரேகா துரைலிங்கம், இயக்குனர் திருமலை என 8 பேரை புதிதாக மாநில நிர்வாகிகளாக காயத்திரி நியமித்த தனது முடிவை கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆதரிப்பார் என்று தெரிவித்திருந்தார். இது குறித்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. இப்படி ஒரு நிலையில் காயத்ரி ரகுராம் நிர்வாகிகளை நீக்கியது செல்லாது என பாஜகவின் பொதுச் செயலாளர் நாகராஜன் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர்,

-விளம்பரம்-

காயத்ரி ரகுராம் டீவ்ட்:

காயத்ரி ரகுராம் அந்த பிரிவின் நிர்வாகிகள் மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டபடி இல்லாமல் கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிர்வாகிகள் அதே பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி தெரிவிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இது தொடர்பாக காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தில் தலைவரின் முடிவை ஏற்பதாக பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் காயத்திரி பாஜகவை விட்டு விலகப் போகிறார். பாஜக அவரை நீக்க போகிறது என்றெல்லாம் செய்திகள் வெளியாகி இருந்தது.

காயத்திரி பதவி பறி போனது:

ஆனால், அதை காயத்திரி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது தொடர்பாக காயத்திரி டீவ்ட் போட்டு என்னை பதவியில் இருந்து நீக்குவது பற்றி பாஜக நினைக்கவில்லை. எங்கள் தலைவர் என்னை நீக்க மாட்டார் என்று எல்லாம் பதிவிட்டு இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் காயத்திரி யாத்திரை கிளம்பி இருந்தார். மேலும், யாத்திரை முடிந்து திரும்பி வந்த அவருக்கு பதவி பறிபோய் இருக்கிறது. தனது பதவி போகாது என்று நம்பிக்கையோடு காத்திருந்த காயத்ரி கடைசியில் பதவி பறிபோய்விட்டது தான் மிச்சம். இருப்பினும் தான் எப்போதும் மோடியின் விவாசி தான் Bjpகாரர் தான் என்று குறி வரும் காயத்ரி நேற்றில் இருந்து பல ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement