Neet புத்தகத்தை வெளியிட்டுட்டு ஏன் இப்படி ரெட்ட வேஷம் போட்றீங்க – காயத்ரி ரகுராம் பதிவிட்ட புகைப்படம்.

0
1374
surya
- Advertisement -

நீட் தேர்வு பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவி அனிதா துவங்கி பல்வேறு மாணவர்கள் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த சில திங்களுக்கு முன்னர் கூட அரியலூரில் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் மருத்துவக் கல்விக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வு நடக்கவிருந்த ஒரு நாளைக்கு முன்பாக நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக ஜோதி தற்கொலை செய்து கொண்டார்.

-விளம்பரம்-

ஜோதி தற்கொலை செய்து கொண்ட அன்றே, மற்றொரு மாணவனும் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களை சம்பவம் குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ‘ கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ என்றும் கூறி இருந்தார்.

- Advertisement -

சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் பா ஜ க தொண்டருமான காயத்ரி ரகுராம் ‘விருப்பமான நடிகரின் திரைப்படம் வெளியாகும் போது, முதல் நாள் முதல் காட்சிக்காக ரசிகர்கள் பேனர்கள் வைக்கிறார்கள்.. பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்துவிடுகிறார்கள். ரசிகர் மன்றத்தில் பணத்தை செலவு செய்து உயிரிழந்தும் விடுகிறார்கள்.

அதற்காக  சினிமாவையே தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்போமா? எந்த ஒரு லாஜிக்குமே இல்லை தானே?..தேர்வுகளை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.. மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினந்தோறும் தேர்வு எழுவதைப் போலத்தான்’ என்று டிவீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா புத்தகம் வெளியிடுவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம் ‘neet புத்தகத்தை வெளியிட்டுவிட்டு ஏன் இப்போது இரட்டை வேடம் போட்றீங்க’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுராம். சூர்யாவின் இந்த புகைப்படம் 2017 ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நடந்த விழாவின் புகைப்படம். இந்த விழாவில் தலைப்பே ‘நீட் மொழி சவால்களும் பயிற்றுமொழி சிக்கல்களும் ‘ என்பது தான்.

Advertisement