நீட் தேர்வு விவகாரத்தில் கருத்து தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். நீட் தேர்வு பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து குரல் எழுந்த நிலையில் நடிகர் சூர்யா, நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களை சம்பவம் குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் ‘ கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ என்றும் கூறி இருந்தார். சூர்யாவின் இந்த கருத்தால் இந்தப் பிரச்சினையை தீவிரமாக முன்னெடுக்கும், பாஜக, இந்து மக்கள் கட்சியினர் தொடர்ந்து நடிகர் சூர்யாவை விமர்சித்து வருகின்றனர்.
சூர்யாவின் இந்த பேச்சை எதிர்த்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். அதேபோல எஸ் எம் சுப்ரமணியம் என்ற நீதிபதி நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். ஆனால், இந்த கடிதத்தை நிராகரித்த தலைமை நீதிபதி ‘ பொது மேடையில் பேசும்போது கவனமாக இருக்கவேண்டும். நீதிமன்றத்தின் நீதிபதிகளை அவமதிக்கும் விதத்தில் கருத்து சொல்லக்கூடாது’ என்று சூரியாவிற்கு அறிவுரை வழங்கியிருந்தார்.
நீதிமன்றத்தின் இந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட சூர்யா இதுகுறித்துட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்ததாவது ‘இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நான் எப்போதும் நம்முடைய நீதித்துறையை மிக உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கிறேன். இது நம்முடைய மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கை. நீதிமன்றத்தின் ஞாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இருப்பினும் பா ஜ கவை பலர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் நீதி மன்றத்தின் அறிவுரையை ஏற்பதாக சூர்யா பதிவிட்ட டீவீட்டிற்கு பதில் அளித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், என்று பதிவிட்டுள்ளார்.