4 வயது முதல் சிம்புவை தெரியும்.! ஆனால், இப்போதான் அவர் படத்தில் பணியாற்றுகிறேன்.!

0
708
Simbu
- Advertisement -

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது முன்னாள் காதலியான ஹன்சிகா நடித்துவரும் ‘மஹா’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்புவை மாலை அணிவித்து படக்குழுவினர் வரவேற்றனர். மேலும், வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் ‘மஹா’ படக்குழுவில் நடன இயக்குனரான காயத்ரி ரகுராம் இணைந்துள்ளார்.

- Advertisement -

நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். ஆனால், இதுவரை ஒரு படத்தில் கூட சிம்புவுடன் பணியாற்றியது இல்லை. இந்த நிலையில் சிம்பு மற்றும் ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளார் காயத்ரி.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் சிம்புவை ‘எனக்கு நான்கு வயது முதல் தெரியும், தற்போது அவருடன் பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது. இதுவரை அவரின் தோழியாக இருந்த நான் தற்போது அவருடைய மிகப்பெரிய ரசிகை ஆகி விட்டேன். சிம்பு மாஸ்’ என்று பதிவிட்டுள்ளார் காயத்ரி.

-விளம்பரம்-

Advertisement