‘கல்யாண மண்டபத்துக்கு தந்தை பெயரை வைக்கணும், நடிகர் சங்கத்த அகரம் அறக்கட்டளையா மாத்தணும் அதன் அவர் திட்டம் – கார்த்தியை விமர்சித்த காயத்திரி

0
664
gayathri
- Advertisement -

நடிகை காயத்ரி ரகுராம் பாண்டவர் அணி குறித்தும், நடிகர் கார்த்தி குறித்தும் விமர்சித்து பதிவிட்ட டீவ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் உள்ள நடிகர்களுக்கு என்று ஒரு தனி சங்கம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் தான் நடிகர் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். பின் 2015 ஆம் ஆண்டு தான் தேர்தல் தொடங்கியது. அதோடு நடிகர் சங்கத்திற்கு என பல ஆண்டு காலமாகவே கட்டிடம் கட்டும் திட்டம் இருந்து கொண்டிருக்கின்றது. இதனை எதிர்த்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்று நடிகர் விஷால் பாண்டவர் அணி உருவாக்கினார். 2015 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கினார்.

-விளம்பரம்-

பின் இரு அணிக்கும் இடையே வார்த்தை மோதல்கள் பயங்கரமாக உச்சகட்டத்தை எட்டி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இறுதியில் விஷால் அணி அனைத்து பதவிகளையும் பெற்று நாசர் தலைமையில் விஷால் செயலராக பதவி ஏற்றார். இந்த செயற்குழு பதவிக்காலம் முடிவடைந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் 2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது.இந்த முறை விஷாலுக்கு எதிராக புதிய அணியை உருவாக்கி இருந்தார் ஐசரி கணேஷ். ஐசரி கணேஷ் ஆதரவில் பாக்யராஜ் அணி போட்டியிட்டது. பின்னர் இரு தரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்து போட்டியிட்டனர்.

- Advertisement -

நடிகர் சங்கம் தேர்தல்:

வழக்கம் போல் வார்த்தைக்கு வார்த்தை என இரு அணிகளுமே கடும் போட்டி ஏற்பட்டது. பின் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இருந்தாலும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உரிமையாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து இந்த தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பை அளித்தது. ஆனால் இதை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மனு தாக்குதல் செய்திருந்தார்கள். பின் இவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து வாக்குகளை எண்ண நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீண்டும் வெற்றி பெற்ற பாண்டவர் அணி:

மேலும், பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் தலைமையில் போட்டியிட்ட விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றுள்ள இந்த அணியை சேர்ந்த பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்தலில் 100 க்கும் அதிகமான ஓட்டுகள் கூடுதலாக உள்ளதாகவும், ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு நடப்பதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார் பாக்யராஜ்.

-விளம்பரம்-

கார்த்திக் அளித்த பேட்டி:

மேலும், தேர்தல் முடிவு வந்த பிறகு நடிகர் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசியது, வாக்காளர்களுக்கு நன்றி. நடிகர் சங்கத்துக்கு கட்டப்படும் கட்டிடத்தை கட்டி முடிப்போம் என்று உறுதியளித்திருக்கிறேன். இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலினை தனது அணியினருடன் சந்திக்க இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். இதற்கிடையில் 870 வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக போட்டியிட்ட காயத்ரி ரகுராம் தோல்வி அடைந்துள்ளார். இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் பல்வேறு காரணங்களை கூறி விஷால் மீது குற்றம்சாட்டி பதிவு போட்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திகின் பேச்சு குறித்து காயத்திரி டீவ்ட் போட்டு இருக்கிறார்.

பாண்டவர் அணி குறித்து காயத்ரி பதிவிட்ட பதிவு:

அதில் அவர், தேர்தலில் நிறைய தில்லு முல்லு வேலை நடந்து இருக்கிறது. பொய்யான ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது. தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதைவிட மக்கள் அதிகாரத்திற்காக பசியுடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்து தேர்தலுக்கு பணம் செலவழிக்கிறார்கள். கோர்ட்டு வக்கீல் கட்டணத்திற்கு செலவு செய்கிறார்கள். ஆனால், நடிகர் சங்கம் கட்ட முடியாது. போலி வாக்குகளுக்காக இரண்டரை ஆண்டுகள் செலவழித்து வீணடித்திருக்கிறார்கள். கூடுதல் வாக்குகளை பற்றி விஷால் அணிக்கும் முன்பே தெரியும் போலிருக்கிறது. மக்கள் நினைப்பது இது தான். தயவு செய்து அவர்களுக்கு பதில் சொல்லுங்கள் கார்த்தி.

கார்த்தி குறித்து காயத்ரி கூறியது:

நடிகர் சங்க கட்டிடம் நடிகர் சங்க தேர்தல் உடன் இணைக்கப்படவில்லை. போலி வாக்குக்கு பணம் செலவழிக்காமல் கட்டிடம் கட்டி இருக்கலாம். மேலும், கல்யாண மண்டபத்திற்கு தனது தந்தை நடிகர் சிவகுமாரின் பெயரை வைக்க வேண்டும் என்பது தான் கார்த்திக்கின் எண்ணம். நடிகர் சங்கத்தை அகரம் அறக்கட்டளை ஆக மாற்ற திட்டமிட்டுள்ளனர் என்று காயத்ரி ரகுராம், கார்த்தியை தாக்கி பயங்கரமாக விமர்சித்து பதிவுகளை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு விஷால் மற்றும் கார்த்திக் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Advertisement