ஓவியாவை அவங்க விலைக்கு வாங்கிட்டாங்க – மோடி குறித்து பேசியதால் காயத்ரி ரகுராம் காட்டம்.

0
1620
oviya
- Advertisement -

ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் மோடி பற்றிய ஹேஷ் டேக் குறித்து நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஓவியா ட்வீட் செய்து இருப்பது கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக #GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. விவசாய போராட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்கு கருப்பு தினம் என்று கூறி நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் #GoBackModi ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்கையில் நடிகை ஓவிய #GoBackModi என்ற ஹேஷ் டேக்கை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பிக் பாஸ் நடிகை காஜல் பசுபதியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ஓவியாவின் இந்த டீவீட்டிற்கு நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், #வாயை_ மூடு_போடி சும்மா ரைமிங். உன்னை மரியாதை குறைவாக எதுவும் பேசவில்லை. பிக் பாஸில் உனக்கு எதிராக தான் இருந்தேன். ஆனால், நான் சரியானதை தேர்வு செய்து இருக்கிறேன். என்று பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், ஓவியாவை திமுக கட்சியினர் விலைக்கு வாங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதே போல பிக் பாஸில் இருந்த வரை காயத்ரிக்கும் ஓவியாவிற்கும் தான் அடிக்கடி முட்டிக்கொண்டது. ஆனால், பிக் பாஸுக்கு பின்னர் காயத்ரி ரகுராம், ஓவியா பற்றி எதுவும் பேசாமல் இருந்து தான் வந்தார். ஆனால், மோடி பற்றி ஓவியா போட்ட இந்த ட்வீட்டால் காயத்ரி ரகுராமிற்கும் ஓவியாவிற்கும் மீண்டும் முட்டிக்கொண்டு உள்ளது. காயத்ரி ரகுராமன் இந்த டீவீட்டிற்கும் ஓவியா எந்த பதிலையும் இன்னும் கூறவில்லை.

-விளம்பரம்-
Advertisement