‘நான் ஒரு வலிமையான இந்து சனாதன மாமி’ – Bjpயில் இருந்து விலகுவது குறித்து கேட்ட ரசிகருக்கு காயத்ரி கொடுத்த பதில்.

0
356
gayathri
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

-விளம்பரம்-

இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் என் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார் இவர் 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் ஸ்டைல் பரசுராம் விசில் விகடன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

- Advertisement -

சினிமா To அரசியல் :

வயதும் உடல் எடையும் கூடியதால் இவருக்கு சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே கதாநாயகி ஆகும் வாய்ப்பு கைநழுவி போனது. இறுதியாக தமிழில் கடந்த ஆண்டு வெளியான யாதுமாகி நின்றார் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் நடுவராகவும் பங்கேற்று வந்தார் காயத்ரி ரகுராம். பல ஆண்டுகளாக bjpயில் இருந்து வரும் காயத்ரி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is image-157.png

மறு திருமணம் குறித்து காயத்ரி :

மேலும் இவர் அந்த கட்சியின் கலை, கலாச்சார பிரிவு நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை காயத்ரி ‘நான் கடவுளையும், மோடியையும் பின்பற்றுகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘முதலில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை வாழுங்க மேடம்’ என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த காயத்ரி என் குடும்பம் தான் எனக்கு கடவுள். எனக்கு அவர் பல சகோதர சகோதரிகளை கொடுத்துள்ளார். இல்லாத குழந்தைகளுக்கு என் உதவியை செய்வேன்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-156.png

காயத்ரி போட்ட பதிவு :

அது தான் என் நோக்கம். கடவுள் எனக்கு உலகம் என்ற மிகப்பெரிய குடும்பத்தை கொடுத்து இருக்கிறார். உங்கள் அக்கறைக்கு நன்றி, நீங்கள் கவலைப்பட்டால் எனக்கு ஒரு நல்ல சகோதரனாக இருந்து ஆபாசமான கமண்டுகளில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று உருக்கமுடன் கூறியுள்ளார். அதே போல சமீபத்தில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பதிவிட்டு இருந்தார்.

பா ஜ கவில் இருந்து விலகளா ? :

இதற்கு ட்விட்டர் வாசி ஒருவர், மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டு இருந்தார். இதனால் காயத்ரி பா ஜ கவில் இருந்து விலக போகிறார் என்று சிலர் கமன்ட் செய்தனர். இதற்கு பதில் அளித்த காயத்ரி ‘எனக்கு கட்சி பதவி இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம்.. நான் கட்சி தாவ மாட்டேன்.. இன்னும் என் தேசத்திற்காக உழைப்பேன். நான் பாஜக மற்றும் மோடிக்கு வேலை செய்வேன். நான் ஒரு வலிமையான இந்து சனாதன மாமி.’ என்று கூறி இருக்கிறார்.

Advertisement