பிரியா பவானி சங்கருடன் காதலா ? ஹரிஷ் கல்யாண் போட்ட ட்வீட். அப்போ ராஜவேலுவின் நிலை ?

0
1809
pbs
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ராஜ் வேல் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வருகிறது. ஆனால், இதுவரை ஒரு முறை கூட பிரியா பவானி சங்கர் வெளிப்படையாக கூறியதில்லை. மேலும், இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் அதிகமாக வந்து கொண்டு தான் இருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்தது தான்.

-விளம்பரம்-

அவ்வளவு ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜ் வேல் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது, தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த பிரியா பவானி சங்கர், நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன் என்று பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் குறித்து போட்ட ட்வீட் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியா பவானி ஷங்கருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘ “Finally, Happy for US”  என்று பதிவிட்டு இரண்டு ஹார்டின் எமோஜி ஒன்றையும் போட்டு #HarishHeartsPriya என்று ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

இதற்கு பதில் ட்வீட் செய்து இருந்தார் பிரியா பவானி சங்கர், லாக்டவுன் முடியற வரைக்கும் உன்னால வெய்ட் பண்ண முடியலயா ஹரிஷ் கல்யாண். நான் தான் இதை பற்றி முதலில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ஹரிஷ் கல்யாண் ‘காத்திருக்க முடியவில்லை, காத்திருக்கவும் மாட்டேன். நானே நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கிறேன்’ என்று ட்வீட் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கரின் இந்த ட்வீட்களை பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உண்மையில் சொல்லுங்கள், நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா ? அப்போ ராஜவேலுவின் நிலை என்ன என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்களோ இது கண்டிப்பாக எதாவது படத்தின் ப்ரோமோஷனுக்காக இருக்கும் என்று கமன்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ இது குறித்து நாளை தெரிந்துவிடும்.

Advertisement