இவர் தான் மனதை வென்று வருகிறார்.! ஹரிஷ் கல்யாண் புகழ்ந்த பிக் பாஸ் 3 பெண் பிரபலம்.!

0
1882
Harish-Kalyan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வாய்ல்டு என்ட்ரி மூலம் நுழைந்து மக்கள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பல இளசுகளின் கனவுக் கன்னியாக இருந்து வரும் லாஸ்லியா பாடல் பாடிய வீடியோ ஒன்றை ஹாரிஸ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமக்கு பரிச்சயமான பல போட்டியாளர்கள் இருந்தாலும் பரிட்சயம் இல்லாத ஒரு சில போட்டியாளர்களும் இந்த சீசனில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையைச் சேர்ந்த செய்தி தொகுப்பாளரான இவர் தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலான ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : கர்பமாக இருக்கும் வேலையில் நீச்சல் குளத்திற்கு அடியில் இப்படி ஒரு போட்டோ ஷூட் தேவையா.! 

- Advertisement -

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா இலங்கையில் சக்தி என்கிற தொலைக்காட்சியில், தொகுப்பாளினியாகவும், செய்திவாசிப்பாளராக அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். இலங்கை கிழக்கு மாகாணம் திருகோணமலை சேர்ந்த லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்டார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லாஸ்லியா, ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதையா ராணியும் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணம்மா ‘ பாடலை பாடி இருந்தார். அந்த விடியோவை கட் செய்து கண்ணம்மா பாடலின் ஒரிஜினல் வீடியோவில் லாஸ்லியா இடம்பெற்றிருப்பது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.

-விளம்பரம்-

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹரிஷ் கல்யாண் ‘லாஸ்லியா மனதை வென்று வருகிறார். பிக் பாஸ் வீட்டில் கண்ணம்மா பாடலை கேட்பதில் மகிழ்ச்சி. இதனை எடிட் செய்தவர்களுக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement