‘நூறு சதவீதம்’ கட்டிப்பிடி வைத்தியம்’ என்று கேட்டவுடன் நம் நினைவில் முதலில் வருவது கவிஞர் சினேகன் தான். சினிமாவில் பாடல் ஆசிரியராக இருந்த இவர், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்ற சில போட்டியாளர்கள் இந்த ஆண்டு நடைபெற்று வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று வருகின்றனர். நடிகை ஓவியாவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினராக கவிஞர் சினேகன் சென்றுள்ளார்.
ஏற்கனவே, பிக் பாஸ் முதல் சீசனில் இவரை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வந்தனர். இந்நிலையில் தற்போது சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள சினேகனை மீம் கிரியேட்டர்கள் விதவிதமான மீம்களை போட்டு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
கவிஞர் ஸ்நேகனின் ட்ரோல் செய்து மீம் கிரியேட்டர்கள் செய்த்துள்ள பல மீம்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் பெரும்பாலான மீம்கள் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா போன்றவர்களை சம்மந்தபடுத்தி போடப்பட்டுளளது. அந்த மீம்களில் சில உங்கள் பார்வைக்கு.