அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாமல் போன காரணம். கமலிடம் வாய்ப்பு கேட்டது ஏன் ?

0
536
imman
- Advertisement -

‘ஹே, மிஸ் பண்ணிடாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க!!’ என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இமான் அண்ணாச்சி. இவர் தன்னுடைய நெல்லை தமிழ் பேச்சு மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும், இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பரிச்சயமான முகங்களில் ஒருவராக இருந்தவர் இமான் அண்ணாச்சி. இவர் பிக்பாஸ் வீட்டில் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக விளையாடி மற்றவர்களை மகிழ்வித்தும் இருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியதை குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் சினிமா படங்கள் குறித்தும், பிக் பாஸ் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

கோயம்பேட்டில் வேலை :

அதில் அவர் கூறி இருப்பது, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று 18 வருடங்கள் போராடி இருக்கிறேன். எனக்கு முதலில் கிடைத்தது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு தான். மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கோயம்பேட்டில் காய்கறி விற்று வரும் பணத்தை வைத்து தான் குடும்பத்தை ஓட்டி கொண்டிருந்தேன். இன்னொரு பக்கம் சினிமாவையும் விடாமல் நம்பிக்கையாக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன். அப்ப தான் நல்ல சம்பளத்தோடு தொலைக்காட்சி வாய்ப்பு வந்தது.

சன் தொலைக்காட்சிக்கு வந்த காரணம் :

முதலில் தொலைக்காட்சியில் நடிக்க தயக்கமாக இருந்தது. ஆனால், குடும்ப சூழல் காரணமாக நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன். அந்த சிறப்பான முடிவு தான் இன்று நான் எந்த இடத்தில் இருக்கிறேன். குழந்தைகளை மகிழ்விக்கும் அளவுக்கு கடவுள் என்னை அழகா படைத்திருக்கிறார் என்று தான் நான் மகிழ்வேன். அதுமட்டுமில்லாமல் அவர்களுடைய கண்களுக்கு நான் விருப்பமான ஒருவனாக இருப்பது நினைத்து ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

-விளம்பரம்-

பட வாய்ப்புகள் :

அதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சி குழந்தைகள் மட்டுமில்லாமல் வயதான பெரியவர்களிடமும் என்னை கொண்டு போய் சேர்த்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அண்ணாச்சியை எதற்காக வெளியே அனுப்பினீர்கள்?என்று நான் வெளியே வந்தவுடன் பலரும் ஏக்கத்துடன் கேட்ட கேள்வி என்னை உணர்ச்சி அடையசெய்து விட்டது. அந்த அளவிற்கு என் மீது மக்கள் அன்பையும் பாசத்தையும் வைத்திருப்பது நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு சில படங்களில் நடித்து முடித்தும், சில படங்கள் என் மீதுள்ள அன்பின் காரணமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Imman Annachi shakes a leg for special song

இசைவாணியுடனான பிரச்சனை :

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு புதுவிதமான அனுபவம் கிடைத்தது. அதோடு என்னால் முடிந்தவரை மக்களை சிரிக்க வைத்தேன் என்று நம்புகிறேன். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறேன். இருந்தாலும் வெற்றி பக்கத்திற்கு சென்று வந்தது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. இசைக்கும் எனக்கும் பனிப்போர் என்று சொல்வதெல்லாம் ஒன்னும் இல்லை. நாங்கள் பிக்பாஸ் வீட்டில் எங்கள் நன்றாக தான் பழகினோம். பின் எங்களிடையே இடையே இருந்த சர்ச்சைகள் மறைந்து நாங்கள் சாதாரணமாக தான் பேசி பழகி வந்தோம். அதேபோல பிக் பாஸ் வீட்டில் ராஜி- எனக்குமான உறவு அண்ணன் தம்பி உறவு. இருவரும் முடிந்தவரை நகைச்சுவை வெளிப்படுத்தி மக்களை சிரிக்க வைக்க முயற்சி செய்தோம்.

isaivani

கமலிடம் வாய்ப்பு கேட்டது ஏன் :

மேலும், நான் சினிமாவில் விஜய், சூர்யா,சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பெரும்பாலான நடிகர்களுடன் படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதில் நான் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதே போல் ரஜினி,கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இந்த ஆசைகள் எல்லோருக்கும் இருக்கும். அதற்கான தருணமாக தான் பிக்பாஸ் மேடையை பயன்படுத்திக் கொண்டேன். கமல் சார் உடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அவரும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு என்னை வாழ்த்தியது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement