இதனால் தான் திருமணம் ஆனதை பற்றி நான் பேசவில்லை – முதல் முறையாக மனம் திறந்த இசைவாணி

0
334
isaivani
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. யார் டைட்டில் வின்னர்? ஆகப் போகிறார் என்று கணக்கிட முடியாத அளவிற்கு போட்டியாளர்கள் விளையாடி கொண்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷன் நடந்து கொண்டு இருக்கிறது. நிகழ்ச்சி எவ்வளவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு எலிமினேட்டும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவத்தை பேட்டி கொடுத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் இசைவானி பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவத்தை சமீபத்தில் பிரபல பத்திரிகையாளரிடம் கூறியிருக்கிறார். இசைவாணி 2019 ஆம் ஆண்டு ட்ரம்ஸ் கலைஞர் சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இசைவாணி தனக்கு திருமணம் ஆனது குறித்த தன்னுடைய கனவு குறித்து தன்னுடைய விவாகரத்துக்கான காரணம் குறித்து பிக்பாஸில் இருந்தபோது சொல்லவில்லை.

- Advertisement -

இசைவாணி பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவரின் திருமண வாழ்க்கை குறித்து பேசிய இசை வாணியின் தோழிகள், அவளின் திருமண வாழ்க்கை கண்டிப்பாக சரியாக இருக்காது என்று தெரிந்தும் அவள் எவ்வளவோ அதை இழுத்துப் பிடித்தால். ஆனாலும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின்னர் அவள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தால் நாங்கள் தான் அவளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தோம் என்று கூறியிருந்தனர்.

வாழ்க்கையில் மிகவும் மன அழுத்தத்தில் இருந்து நிறைய பேர் கேட்டிருந்தார்கள். நான் திருமணமானதை மறைத்து விட்டேன் என்று. ஆனால், நான் மறைக்கவில்லை அதை நான் தனிப்பட்ட பிரச்சினையாக கொண்டு வரவும் இல்லை. ஆனாலும், அதை பற்றி நிறைய பேர் கேலி செய்தார்கள். ஆனால், இதற்கு பின்னரும் நான் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த விஷயம் தேவையில்லை என்று நினைப்பதால் அதைப்பற்றி நான் பேசவில்லை.

-விளம்பரம்-

Advertisement