பெருமையாக ஜெயிலுக்கு சென்ற லாஸ்லியா, அபி.! வெச்சி செய்து கதறவிட்ட பிக் பாஸ்.!

0
4742
Abi-Losliya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடில் கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது பல போட்டியாளர்களும் தங்களது கட்டுப்பாட்டை மீறி காச் மூச்சுனு சண்டையிட்டனர். நேற்றுடன் இந்த டாஸ்கே முடிந்த நிலையில், இந்த டாஸ்கில் சிறந்து விளையாடியது யார், சுவாரசியமாக செய்யாதது யார் என்று பிக் பாஸ் கேட்டார்.

- Advertisement -

இந்த வார டாஸ்கை யார் சுவாரசியம் இல்லாமல் செய்த்து என்று கேட்ட போது லாஸ்லியா மற்றும் அபிராமி இருவரும் தாமாக முன்வந்து தங்களது பெயரை சொன்னார்கள். இதனால் கொஞ்சம் அப்சட் ஆன கவின், இந்த டாஸ்கை ஸ்வாரசியம் குறைவாக செய்த்து ஷெரின் மற்றும் சாக்க்ஷி தான் என்றார். இருப்பினும் விடாபிடியாக இருந்த லாஸ்லியா நான் தான் விதிகளை மீறினேன் இதனால் என்னை ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்று சென்றுவிட்டார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மீரா.! ரகசிய அறைக்குள் வைக்கப்படுவாரா? 

இறுதியில் லாஸ்லியா மற்றும் அபிராமி ஜெயிலுக்கு சென்றனர். ஆனால், அது தண்டனை என்று உணராத இருவரும் ஜாலியாக உள்ளே சென்றனர். இவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது எரிச்சல் வந்தது. அதிலும் ஜெயிலுக்குள் இருப்பர்வர்களுக்கு உணவு அளிக்க கூடாது என்று பிக் பாஸ் கூறியும் இருவரும் வேண்டுமென்றே காப்பியை மாறி மாறி குடித்தனர்.

-விளம்பரம்-

அதே போல சிறை தண்டனை ஏதோ பிக்நிக் செல்வது போல மிகவும் ஜாலியாக எடுத்துக்கொண்டனர். இதனால் தர்ஷன் கூட ‘ ஜெயில் என்பது ஒரு தண்டனை அதனை இப்படி விளையாட்டாக எடுத்துக்கொண்டால் எப்படி ‘ என்று கூறியிருந்தார். இப்படி ஜெயிலை விளையாட்டாக எடுத்துக்கொண்ட லாஸ்லியா மற்றும் அபிராமி இருவரும் பிக் பாஸ் தகுந்த பாடத்தை கற்பித்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் அபிராமி இருவருக்குமே ஜெயிலில் தரும் உணவை போலவே கலி கொடுக்கப்பட்டது. அதனை இருவருமே உன்ன முடியாமல் தவித்தனர். அதன் பின்னர் தான் இருவரும் ஜெயில் தண்டனை என்றால் என்ன என்பதை உணர்ந்தனர்.

இதனால் அபிராமி, நாங்கள் தெரியாமல் விளையாடி விட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் பிக் பாஸ் என்று மன்னிப்பு கேட்டார். இருப்பினும் பிக் பாஸ் விடுவதாக இல்லை, அவர்கள் இருவரிடமும் சப்பாத்தி மாவை கொடுத்து அதனை பிணைந்து ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க சொன்னார். அந்த சப்பாத்தியை சிறையில் இருப்பவர்கள் சப்பிடகூடாது என்றும் கூறினார் பிக் பாஸ்.

இதனால் தலை காய்ந்து போன அபிராமி இனி இது போல தவறு செய்ய மாட்டேன் என்று கேமரா முன்பு புலம்பினார். இருப்பினும் வலிக்காதது போல நடித்த லாஸ்லியா எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை அபிராமியை மட்டும் அனுப்பிவிடுங்கள் என்றார். பின்னர் இறுதியாக இருவரையும் பிக் பாஸ் விடுவித்தார். இதனால் இனி சிறை தண்டனையை யாரும் துச்சமாக எண்ண மாட்டார்கள் என்பதை மட்டும் போட்டியாளர்கள் புரிந்து கொண்டனர்.

Advertisement