ஐஸ்வர்யாவை கிழிச்சி தொங்கவிட்ட ஜனனியின் தங்கச்சி.!

0
361
krithika

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா , ராணி மஹா ராணி டாஸ்கின் போது பாலாஜி மீது குப்பை கொட்டிய விடயம் இன்னும் ஓயாமல் ஒரு விவாதமாகவே இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பல போட்டியாளர்களின் குடும்பத்தரிடம் பல்வேறு பேட்டிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் அனைவரிடமும் கேட்கப்படும் பொதுவான கேள்வி ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியதை பற்றி தான்.

Aishwarya-dutta

இந்நிலையில் சமீபத்தில் ஜன்னனி ஐயரின் தாய், தங்கை மற்றும் ஜனனனி அவர்களின் தோழி சொந்தர்யா ஆகியோர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது ஐஸ்வர்யா ராணி மஹா ராணி டாஸ்கின் போது அவருக்கு ஆலோசகராக ஜனனனி இருந்து வந்தார், ஆனால் ஜனனனி, பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டும் போது ஏன் தடுக்கவில்லை என்று கேள்வி கேட்டபட்டபோது,

அதற்கு ஜனனியின் அம்மா ,’ஜனனனியை தான் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கோட்ட சொன்னாங்க, ஆன அவ கொடடல. அந்த டாஸ்கில் ஜனனனி, ஐஸ்வர்யாவிற்கு தா ஆதரவாக இருக்கனும் அதுனால தா அவ தடுக்கள’ என்று கூறியுள்ளார்.

Janani-sister

அதே போல ஐஸ்வர்யா குறித்து ஜனனியின் தங்கை கிருத்திகா பேசுகையில், ‘ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை கொட்டியதும் ஜனனனி போய் பாலாஜிக்கு ஹெல்ப் பண்ணா, அப்போ கூட பாலாஜி அவளை திட்டி வேண்டாம் என்று அனுப்பிவிட்டார். அதே மாதிரி ஐஸ்வர்யா தா யார் பேச்சையும் கேட்கவே இல்லையே, ராணினு சொன்னதும் ரெண்டு கொம்பு மொளச்ச மாதிரி இருந்தாங்கலே ‘ என்று ஐஸ்வர்யாவை திட்டி தீர்த்தார்.

Aishwarya

இதையடுத்து பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து ஜனனியின் அம்மவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ‘அடங்காபிடாரி’ யார் என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் ஐஸ்வர்யாவின் பெயரை கூறியுள்ளார். இதிலிருந்து ரசிகர்களை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினரும் ஐஸ்வர்யா செய்த செயலை இன்னும் மறக்காமல் ஐஸ்வர்யா மீது எரிச்சலில் தான் இருந்து வருகின்றனர் என்று தெளிவாக தெரிகிறது.