ஜனனி ஆடிய போங்காட்டாம் – அவரின் நாமினேஷன் Free விக்ரமனுக்கு செல்கிறதா ? வைரலாகும் வீடியோ இதோ.

0
396
vikraman
- Advertisement -

விக்ரமனை ஏமாற்றி ஜனனி நாமினேஷன் ஃப்ரீக்கு சென்ற குறும்படத்தை ப்ரோமோவாக விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 68 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, நிவாஷினி மற்றும் சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த முறையும் நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 10 போட்டியாளர்கள் போக தற்போது 11 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். அதோடு வாரம் வாரம் ஒரு சுவாரசியமான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து வருகிறது.

ஏஞ்சல் மற்றும் பேய் டாஸ்க்:

அந்த வகையில் இந்த வாரம் ஏஞ்சல் மற்றும் பேய் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து ஏஞ்சல்ஸ் மற்றும் பேய்களாக மாறி இருந்தனர். நரகத்தில் இருக்கும் பேய்கள் எப்படியாவது சொர்க்கத்துக்கு செல்ல வேண்டும் என்பது தான் இந்த டாஸ்கின் விதிமுறை. அப்படி யார் யாரெல்லாம் சென்றார்களோ அவர்கள் இந்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ சோனுக்கு செல்வார்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தது.

-விளம்பரம்-

நாமினேஷன் ஃப்ரீ சோனில் சென்றவர்கள்:

அதன் படி இந்த டாஸ்க்கில் மணிகண்டன், அமுதவாணன், ஏடிகே, ஜனனி ஆகிய நான்கு பேர் நாமினேஷன் ஃப்ரீ சோனுக்கு சென்றிருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், உண்மையில் விக்ரமன் தான் நாமினேஷன் ஃப்ரீக்கு சென்று இருக்கிறார். ஜனனி செல்லவில்லை. இந்நிலையில் இது தொடர்பான குறும்படத்தை ப்ரோமோவாக விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதில், ஜனனி மற்றும் தனலட்சுமி இருவருமே பொய் சொல்லி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஜனனி செய்த செயல்:

விக்ரமன் தான் முதலில் கை வைத்து இருக்கிறார். அதற்கு பிறகு தான் ஜனனி கை வைத்திருக்கிறார். பொய் சொல்லி ஜனனியை வெற்றியாளராக அறிவித்திருக்கின்றனர். தற்போது இது தொடர்பான ப்ரோமோ தான் வெளியாகி இருக்கிறது. வார இறுதியில் ஜனனி இடமிருந்து நாமினேஷன் ஃப்ரீஸோன் பறிக்கப்பட்டு விக்ரமனியிடம் கொடுக்கப்படும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement