ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட ஜித்தன் ரமேஷ்- இவ்வளவு பெரிய மகளா ?

0
37414
jithan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11வது வாரத்தை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர், அதில் ஜித்தன் ரமேஷும் ஒருவர். இயக்குனர் ஆர்.கே.வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ். அந்த படத்திற்கு பின்னர் இவரை ஜித்தன் ரமேஷ் என்றே அழைத்து வந்தனர்.

-விளம்பரம்-

நடிகர் ஜீவா அவர்களின் சகோதரரான இவர் ஜீவாவிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், நடிகர் ஜீவா அளவிற்கு இவரால் பெயரெடுக்க முடியவில்லை. தமிழில் இதுவரை 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால், அந்த 10 படங்களும் தோல்வியில் தான் முடிந்தது.2011 ஆம் ஆண்டு வெளியான “ஓஸ்தி ” படத்திற்கு பின்னர் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஒரு நடிகனின் வாக்கு மூலம் ” படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் விஜய் நடித்த “ஜில்லா” படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் ஒரு சில நொடிகளுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.

இதையும் பாருங்க : உள்ளாடை அப்பட்டமாக தெரியும் ஆடையில் பிக் பாஸ் நடிகை அனுயா – வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்.

- Advertisement -

நீண்ட வருட இடைவேளைக்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் 2” படமும் எதிர்பார்த்த அளவில் அளவிற்கு வெற்றியடையவில்லை. இறுதியாக உங்கள போடணும் சார் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் தோல்வி தான் அடைந்தது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ஜித்தன் ரமேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் பிக்பாஸில் தனக்கு இத்தனை நாட்கள் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. பிக் பாஸில் எனக்கு ஆதரவு கொடுத்தது போல என்னுடைய படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். மேலும், நான் என்னிடம் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லுங்கள் என்று கூறியிருந்தார் ஜித்தன் ரமேஷ். இந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் உங்கள் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிடுங்கள் என்று கேட்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் ரமேஷ்.

-விளம்பரம்-
Advertisement