அத மட்டும் உண்மையா சொல்லுங்க – ரசிகர்களுக்கு ஜித்தன் ரமேஷ் வேண்டுகோள்.

0
56744
jithan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். கடந்த வாரம் நோமினேஷனில் சோம் ,கேப்ரில்லா,ஜித்தன் , நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தார்கள். . எனவே, கடந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது. அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

-விளம்பரம்-

எனவே, அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை டபுள் ஏவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருந்தது. ஆனால், 12 போட்டியாளர்கள் அப்படியே இருந்தார்கள். 12 பேர் இருந்தும் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடவில்லை. அதற்கு முக்கிய காரணமே அர்ச்சனாவின் லவ் பேட் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

கடந்த ஞாயிற்று கிழமை நிஷா வெளியேறி இருந்த நிலையில் சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டு இருந்தார். ஒரே சமயத்தில் தங்களது குரூப்பை சேர்ந்த 2 பேர் வெளியேறியதால் அர்ச்சனா குழு கடும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். அதிலும் ஜித்தன் ரமேஷின் வெளியேற்றம் மிகவும் வித்யாசமாக இருந்தது. இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் மற்ற போட்டியாளர்களிடம் விடைகொடுக்காமல் நேரடியாக கன்பெஷன் ரூம் வழியாக வெளியேற்றப்பட்டார் ஜித்தன் ரமேஷ். இது மற்ற போட்டியாளர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜித்தன் ரமேஷ் முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த 70 நாள் என்னை பிக் பாஸ் வீட்டில் பார்த்திருப்பீர்கள் இந்த 70 நாளில் உங்களுக்கு என்னிடம் பிடித்த விஷயங்கள் எந்த மாதிரி விஷயங்களை நான் மேலும் வளர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதனை காமெண்ட்டில் தெரிவியுங்கள் உண்மையான கமெண்டுக்கு நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது நன்றி என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement