தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி, ஜோடி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல சீசன்களை கடந்து ஹிட் அடித்தது.
பிக் பாஸ் முடிந்தால் கூட பிக் பாஸ் போட்டியார்களை வைத்து எதாவது ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து கொண்டு வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் பிக் பாஸ் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து bb jodigal என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து இருக்கிறது. விஜய் டிவியில் பல ஆண்டுகள் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியை தான் தற்போது பிக் பாஸ் பிரபலங்களை வைத்து துவங்க இருக்கிறார்கள். இதில் போட்டியாளர்களாக முதல் சீசன் துவங்கி நான்காவது சீசன் வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் நடனமாடி வருகின்றனர்.
இதையும் பாருங்க : நான் சொன்னதா போய் சொல்லு – மச்சானிடம் சொல்லி அனுப்பியும் கேட்காத மிர்ச்சி சிவா. பேசுவதையே நிறுத்தியுள்ள அஜித்.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், வனிதா வெளியேறியதற்கு முக்கிய காரணம் ரம்யா கிருஷ்ணன் தான் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு ரம்யா கிருஷ்னனின் பதில் ‘நோ கமெண்ட்ஸ்’ என்ற ஒற்றை பதில் தான். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் அதில் நடனமாடி கொண்டிருந்த ரமேஷ் திடீரென தடுமாறியது மட்டுமின்றி ஆடுவதை நிறுத்திவிட்டார்.
மேலும், தான் வைத்திருந்த வால் கனமாக இருப்பதாகவும் காரணம் கூறி இருந்தார் ரமேஷ். ரமேஷ் ஆட மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மற்ற போட்டியாளர்கள் கூற, இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த ரம்யா கிருஷ்னன் பின்னர், நீங்கள் போட்டியில் உள்ளீர்கள் ரமேஷ், நாங்கள் உங்களுக்கு மறுவாய்ப்பு தருகிறோம். ஆனால் இது மீண்டும் தொடர கூடாது என எச்சரித்துள்ளார்.