நிகழ்ச்சி நடுவே கடுப்பாகி புகழை கத்திய ரம்யா கிருஷ்ணன் – மிரண்டுபோன போட்டியாளர்கள்

0
3090
- Advertisement -

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி, ஜோடி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல சீசன்களை கடந்து ஹிட் அடித்தது.

-விளம்பரம்-

என்னதான் பல ரியாலிட்டி ஷோ வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக்கொள்ளும் வகையில் விஜய் டிவியிடம் வேறு எந்த ரியாலிட்டி ஷோவும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் பிக் பாஸ் முடிந்தால் கூட பிக் பாஸ் போட்டியார்களை வைத்து எதாவது ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து கொண்டு வருகிறது விஜய் டிவி.

இதையும் பாருங்க : ஷிவானி மாதிரி யுவன் இடுப்பையா காமிக்க முடியும் – யுவனின் இன்ஸ்டா பாலோவர்கள் எண்ணிக்கை குறித்து கவலைப்படும் ரசிகர்கள்.

- Advertisement -

அந்த வகையில் பிக் பாஸ் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து ‘பிக் பாஸ் ஜோடிகள் ‘ என்ற புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை விஜய் டிவி துவங்கியது. இதில் பிக் பாஸ் சீசன் 1 முதல் 4 வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர் இருக்கின்றனர் .

அதே போல இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி புகழ், குரேஷி, தங்கதுரை ஆகியோர் வந்து ரகளை செய்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் நிகழ்ச்சியின் நடுவே திடீரென, குக் வித் கோமாளி புகழை, கடுப்பாகி நடிகை ரம்யா கிருஷ்ணன் கத்தினார். இதனை பார்த்த போட்டியாளர்களும் கொஞ்ச நேரம் மிரண்டுபோனர்கள். பின்னர் தான் தெரிந்தது இது பிராங்க் என்று.

-விளம்பரம்-
Advertisement