ஷிவானி மாதிரி யுவன் இடுப்பையா காமிக்க முடியும் – யுவனின் இன்ஸ்டா பாலோவர்கள் எண்ணிக்கை குறித்து கவலைப்படும் ரசிகர்கள்.

0
924
yuvan
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். இளையராஜாவுக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான்.

-விளம்பரம்-
Image

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா அவர்கள் தன்னுடைய அப்பாவிடமே இசை பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். ஆனால், இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.

இதையும் பாருங்க : காற்றின் மொழி சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா, தெலுங்கில் இப்படி நடித்துள்ளார்.

- Advertisement -

முன்னணி நட்சத்திரங்களில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன், இதுவரை 125 படங்களுக்கு மேல் இணையமைத்துள்ளார். அதே போல தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் படத்திலும் பணியாற்றியுள்ளார் யுவன்.தமிழில் 2000 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்திற்கு இசையமைத்தார் யுவன். அதன் பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘ஏகன், மங்காத்தா’ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது வலிமை படத்திற்கும் யுவன் தான் இசை அமைத்து உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானது சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் தான். அப்போது அவருக்கு வயது 14 தான்.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் சினிமாவில் இருந்த யுவனுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1 மில்லியனுக்கு குறைவான பேர் தான் பாலோ செய்து வருகின்றனர். சமீபத்தில் வைரலான புகழ், ஷிவாங்கி, அஸ்வின் இவர்களை விட யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாவில் குறைவான பாலோவர்களை தான் வைத்து இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் யுவன் மற்றும் அஸ்வின், ஷிவாங்கி, புகழ் ஆகியோரின் இன்ஸ்டா பாலோவர்களை ஒப்பிட்டு மீம் ஒன்று வைரலானது, அதிலும் ரசிகர் ஒருவர் ஷிவானியை விட யுவனுக்கு பாலோவர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று பதிவிட அதற்கு ஒருவர். அதுக்கு என்ன யுவன் இடுப்பையா காமிக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார். அதே போல யுவன் மீம் வைரலாக பரவ தற்போது இன்ஸ்டாவில் பாலோவர்கள் ஏறிக்கொண்டு வருகின்றனர்.

Advertisement