நேத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக் பாஸ் பிரபலத்துக்கு இன்னிக்கு வாழ்த்து கூறி பல்ப் ஜூலி.

0
1609
julie
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற பட்டத்துடன் திகழ்ந்து வரும் விஜய் நேற்று (ஜூன் 22) பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இவரை விட இவரது ரசிகர்கள் தான் இவரது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். இவரை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சின் மூலம் பலரது மனதை கவர்ந்த கவினுக்கும் நேற்று தான் பிறந்தநாள். விஜய் மற்றும் கவினின் பிறந்தநாள் என்பதால் #HBDKavin,#HappyBirthdayVijay போன்ற ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்துவந்தது.

-விளம்பரம்-

விஜய் மற்றும் கவின் பிறந்தநாளை முன்னிட்டு இவர்களின் இரு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் வாழ்த்து மழைகளை பொழிந்து வந்தனர். மேலும், இவர்களின் டிபிகளையும் தங்களது dpகளாக வைத்துவந்தனர். அதே போல நேற்று விஜய் மற்றும் கவினுக்கு மட்டும் பிறந்தநாள் அல்ல நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான காஜல் பசுபதிக்கும் நேற்று தான் பிறந்தநாள் என்பது பலரும் அறிந்த ஒன்று.

இதையும் பாருங்க : தனது மகனின் முதல் பிறந்தநாளுக்கு வந்த விஜய் – அறிய புகைப்படங்களை வெளியிட்ட வனிதா.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காஜல் போட்டியாளராக பங்குபெற்ற அதே சீசனில் தான் ஜூலியும் பங்குபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓவியாவை போலவே காஜலுக்கு ஜூலிக்கும் கொஞ்சம் முட்டிக் கொண்டது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் காஜல் பசுபதியுடன் சமூக வலைதளத்தில் நட்பில் இருந்து வருகிறார் ஜூலி. இந்த நிலையில் காஜலின் பிறந்தநாளுக்கு ஜூலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய காஜலுக்கு நேற்று தான் பிறந்தநாள், ஆனால், ஜூலி இன்று காலை தான் காஜலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர் ஒருவர், ரொம்ப லேட் ஜூலி என்று கலாய்த்துள்ளார். மேலும், இன்னொருவரோ ஜூலி தான் உங்களை விலகி இருக்க சொன்னார் என்று பிக் பாஸில் நடந்த விஷயத்தயும் நினைவு கூர்ந்துள்ளனர் .

-விளம்பரம்-
Advertisement