அன்னிக்கி மீரா மிதுன நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கணும் சொன்ன ஜூலி இப்போ இப்படி சொல்றாரு (இதுக்கு தான் இவர எல்லாரும் போலின்னு சொல்றாங்களோ)

0
984
julie
- Advertisement -

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

வீடியோவில் 7 : 05 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வந்து தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் இவர் லைவ் வந்த போது ரசிகர் ஒருவர், மீரா மிதுன் பற்றி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஜூலி, அந்த பிள்ளையை பார்க்கும்போது எனக்கு பாவமாக இருக்கிறது ஒருவேளை அவங்க நெகட்டிவ் ஈட்டியை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தடு மாறி கொண்டு இருக்கிறாரோ என்ற எண்ணம் இருக்கிறது என்று கூறியுள்ளார் ஜூலி.

வீடியோவில் 35 : 10 நிமிடத்தில் பார்க்கவும்

ரொம்ப நெகடடிவிடியால அவங்களுக்கு ஹாண்டில் பண்ண தெரியல, டக்கு டக்குனு பேசிடராங்க. யாரா இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று கூறியுள்ளார். ஆனால், இதே ஜூலி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவீந்திரனின் யூடுயூப் சேனலில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் குறித்து பல்வேறு விஷயங்களை கூறியிருந்த ஜூலி, மீரா மிதுன் பற்றி பேசுகையில், ஒருவரை நாக்க புடிங்கிட்டு மாதிரி கேள்வி கேட்கணும் என்றால் யாரை கேட்பீர்கள் என்று ரவீந்திரன் கேட்டிருந்தார், அதற்கு பதிலளித்த ஜூலி, மீராமிதுன் தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். முடியவில்லை. போனா போதும்னு பாத்தா முடியல என்று கூறி இருந்தார் ஜூலி.

-விளம்பரம்-
Advertisement