கடற்கரையில் காதலருடன் போலீசில் சிக்கினேனா ? ஜூலி வெளியிட்ட வீடியோ.

0
77794
julie

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ், ஓவியா, ரைசா என்று பல்வேறு நபர்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். அதே போல இந்த சீசன் மூலம் பலரால் வெறுக்கப்ட்டதன் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது செவிலியர் வேலையை விட்ட ஜூலி, தற்போது நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். விமல் நடித்த மன்னர் வகைரா படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்த ஜூலி, அம்மன் தாயி, அனிதா என்று பல்வேறு படங்களில் நடித்து விட்டார். ஆனால், அந்த படங்கள் ஒன்றும் இன்னும் வெளியாகாமல் தான் இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை ஜூலிக்கு விரைவில் திருமணம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைகளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவியது. சமீபத்தில் ஒரு முகநூல் பக்கத்தில் ஜூலி குறித்து வெளியான செய்தி பலரையும் அதிர்ச்சிஆக்கியது. அந்த முகநூல் பக்கத்தில் வெளியான செய்தியில், பிரபல வடஇந்திய தொழில் அதிபருடன் லிவிங் டு கெதரில் ஜூலி, கடற்கரையோரத்தில் காதலனுடன் போலீசில் சிக்கிய பிக் பாஸ் ஜூலி பதறிப்போன திரையுலகம். புகைப்படம் இதோ என்று செய்தியை வெளியிட்டு இருந்தது .

இதை பார்த்து கடுப்பான ஜூலி அந்த முகநூல் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இதுபோன்ற பொய்யான செய்தியை பரப்பி என்னுடைய பெயரை கெடுப்பதற்கு அசிங்கமாக இல்லையா. இது போன்ற ஒருவரின் புகழை கெடுக்கும் பக்கங்களை தயவுசெய்து ஊக்குவிற்கதீர்கள். என்னுடைய திருமணம் குறித்து சமூக வளைதளத்தில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று பதிவிட்டு இருக்கிறார்.மேலும் கடற்கரையில் நான் போட்டோ ஷூட் தான் நடத்தினேன். என்னுடன் புகைப்படக் கலைஞரும், மேக்கப் ஆர்டிஸ்ட்டும், என்னுடைய சகோதரர் கூட இருந்தார் என்று சிறிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ஜூலி.

-விளம்பரம்-
Advertisement