முதல் முறையாக ஜூலி போட்ட புகைப்படத்திற்கு குவிந்த நல்ல கமெண்ட்ஸ்.! காரணம் பிக் பாஸ் தான்.!

0
22190
Julie
- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் “வீர தமிழச்சி” என்ற  நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார். 

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹீட்டர்ஸ்கள் உருவாகிறார்கள். இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் இவரை சமூகவலைதளத்தில் வறுத்து எடுத்து வந்தனர். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி. 

இதையும் பாருங்க : ஏவிக்ஷனுக்கு பின் சேரனுக்கு எதிராக திட்டம் தீட்டிய மீரா.! வெளியான போன் உரையாடல்.! 

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் என்ன செய்தாலும் இவரை கலாய்ப்பதற்கேன்றே ஒரு கூட்டம் சமூக வலைத்தளத்தில் உருவானது. இதனால் கடுப்பான ஜூலி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ ஒன்றை கூட சமூக வளைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் முதன் முறையாக ஜூலி பதிவிட்ட புகைப்படத்திற்கு நல்ல கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

சமீபத்தில் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் புறாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். பொதுவாக ஜூலி இது போன்ற புகைப்படத்தை கண்டால் கலாய்க்கும் ரசிகர்கள், இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வனிதா, மீரா மிதுன் அபிராமியை விட நீ எவ்வளவோ தேவலாம் ஜூலி என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-


Advertisement