பைத்தியம் – ஜூலியின் போட்டோ ஷூட்டை பார்த்து வறுத்தெடுத்த ஜூலியின் பிக் பாஸ் அக்கா.

0
157439
julie
- Advertisement -

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் பல பேர் இருக்கிறார்கள். அதிலும் முதல் சீஸனின் பங்குபெற்ற பலர் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஜூலி. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவரது பெயர் கண்ட மேனிக்கு டேமேஜ் ஆனது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீர தமிழச்சியாக இருந்த ஜூலி பிக் பாஸுக்கு பின்னர் கழுவி ஊற்றி வந்தனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.அதே போல பட வாய்ப்புகள் குவிந்ததால் தன்னை படு ஸ்டைலாக மாற்றிக்கொண்டார் ஜூலி.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் விமல் நடித்த மன்னர் வகைரா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரல் நடித்திருந்தார். அதன் பின்னர் அம்மன் தாயி, அனிதா போன்ற படங்களில் நடித்தார் ஜூலி.இந்த லாக்டவுனில் மற்ற நடிகைகளை போல ஜூலியும் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதிலும் சமீபத்தில் மாடர்ன் உடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டை கண்டு பலரும் வாயடைத்து போனார்கள்.

அந்த வகையில் முதுகில் மெழுகு வத்தியை ஏற்றிக்கொண்டு படு பயங்கரமாக ஒரு போடோ ஷூட்டைநடத்தி இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி, அக்கா அக்கா என்று பாச மழை பொழிந்து வந்த காயத்ரி ரகுராம், இந்த போட்டோ ஷூட்டை பார்த்து, மடத்தனமாக இருக்கிறது. இனி இப்படி செய்யாதே, நீ எப்படி இருக்கிறாயோ அதுவே அழகு தான் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement