இந்நேரம் நான் நர்ஸாக இருந்திருந்தேனே – ஜூலி லேட்டஸ்ட் பேட்டி.

0
1707
julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.

Image

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் முழு நேர நடிகையாக மாறிவிட்டார். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அடிக்கடி எதாவது பதிவிட்டு ரசிங்கர்களிடம் வாங்கி காட்டிக்கொள்வது வழக்கம். இந்த நிலையில் ஜூலிக்கு அவரது பாய் பிரண்டுடன் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால், அதனை பொய் என்று மறுத்துள்ளார் ஜூலி, மேலும் லாக் டவுன் குறித்து பேசிய ஜூலி, கொரோனா பிரச்சனை காரணமாக வெளியில் கூட போக முடியாதபடி ஆகிவிட்டது. ஏன் வேலைக்கு கூட போக முடியவில்லை. ஒரு வேலை நான் நர்ஸ் வேலையில் இருந்திருந்தால் இந்த நேரம் எதாவது கொரோனா வார்டுல பி பி பி கிட்டு இருந்திருப்பேனோ என்னவோ என்று கூறியுள்ளார் ஜூலி.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஜூலியை நர்ஸ் வேலையை ஏன் விட்டுவிடீர்கள் என்று கேட்டதற்கு செவிலியர் பணி என்பது புனிதமான பணி. அதற்கு நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. மற்ற வேலைகளை போல செவிலியர் வேலையை சாதாரணமாக செய்துவிட முடியாது. அதேபோல ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்வது கடினம். சூட்டிங் காரணத்தால் வேலைக்கு தாமதமாக செல்ல வாய்ப்பிருக்கிறது. இதனால் நோயாளிகள் காத்துக் கொண்டிருக்க நேரிடும். நோயாளிகளின் வாழ்க்கையில் நான் விளையாட விரும்ப வில்லை என்று பதில் அளித்திருந்தார்.

-விளம்பரம்-
Advertisement