நடுவராக சென்ற இடத்தில் ஓவியா கோசம்.! கடுப்பான ஜூலி சொன்ன பதில்.! வைரலாகும் வீடியோ.!

0
18084
julie-oviya
- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் நம்ம ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார் ஜூலி. 

-விளம்பரம்-
Image

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் இவரை அசிங்கமாக கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. இதனால் மிகவும் மனம் நொந்த்து போன ஜூலி, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : குரூப்பாக பிகினி போஸ் கொடுத்த லட்சுமி ராய்.! இவர் தான் இப்படின்னா அவங்க தோழிகளும் இப்படி தான் போல.!

- Advertisement -

அந்த வீடியோவில் நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் அப்படி திட்டுகிறீர்கள், எப்போது முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து இப்போதும் ஏன் என்னை திட்டுறீங்க என்று புலம்பியுள்ளார் ஜூலி. பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை இவருக்கும் ஓவியாவிற்கும் தான் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது. மற்ற போட்டியாளர்கள் ஜூலியை வெறுத்த போது ஓவியாதான் ஆதரவாக பேசினார்.

ஆனால், அந்த நன்றியை மறந்து ஓவியா குறித்து ஜூலி தவறாக பேசினார் இதற்காக குறும்படம் எல்லாம் கூட போடப்பட்டது. அதன்பின்னர் ஜூலியை ரசிகர்கள் அதிகம் கலாய்த்து வந்தனர். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் ஜூலி எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஓவியாவின் பெயரை சொல்லி ஜூலியை வெறுப்பேற்றி வந்தனர் ஓவியா ரசிகர்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் ஜூலி பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது ஜூலி மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ரசிகர்கள் ஓவியா வாழ்க என்று கோஷம் போட்டனர். இதனால் கடுப்பான ஜூலி நீங்கள் என்னதான் கத்தினாலும் எனக்கு ஒன்றும் ஆகப் போவது கிடையாது. நான் ஒன்றும் உங்களுக்கு சோறு போட வில்லை நீங்களும் எனக்கு சோறு போடவில்லை. என்று மிகவும் கோபமாக பேசியுள்ளார். இந்த வீடியோவை ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement