போனா போதும்னு விட்டா – மீரா மிதுனை வெளுத்து வாங்கிய ஜூலி.

0
10267
- Advertisement -

சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாகவே மீரா மிதுனின் அட்றாஸிட்டி தான் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. நடிகையும் மாடல் அழகியுமான மீராமிதுன் கடந்த சில காலமாகவே தமிழில் உள்ள பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையான விஷயம் குறித்தும் ட்வீட் செய்து அதன் மூலம் பிரபலத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

-விளம்பரம்-
meera

அதிலும், சமீப காலமாக இவர் விஜய் மற்றும் சூர்யா குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி ட்விட்டரில் பதிவுகளை போட்டு ஒட்டு மொத்த ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளாகியுள்ளார். மீரா மிதுனை கண்டித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஜூலி, மீராமிதுன் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்என்னதான் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன் களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்த சீசன் என்றால் பிக் பாஸின் முதல் சீசன் தான்.

- Advertisement -

இந்த சீசனில் ஓவியாவை அடுத்து ஜூலியை யாரும் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் உச்சிக்கு சென்ற பின்னர் தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் ரியாலிட்டி நிகழ்ச்சி, கடை திறப்பு விழா என்று படு பிசியாக இருந்த ஜூலி தற்போது நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் புதிதாக ஆரம்பித்துள்ள யூடியூப் சேனலில் ஜூலி தான் முதல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் குறித்து பல்வேறு விஷயங்களை கூறியிருந்த ஜூலி, மீரா மிதுன் பற்றி பேசுகையில், ஒருவரை நாக்க புடிங்கிட்டு மாதிரி கேள்வி கேட்கணும் என்றால் யாரை கேட்பீர்கள் என்று ரவீந்திரன் கேட்டிருந்தார், அதற்கு பதிலளித்த ஜூலி, மீராமிதுன் தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். முடியவில்லை. போனா போதும்னு பாத்தா முடியல என்று கூறியுள்ளார் ஜூலி.

-விளம்பரம்-

Advertisement