இலவசமாக பெற்ற செவிலியர் சான்றிதழை பதிவிட்ட ஜூலி. அதை நீங்களும் பெறலாம் எப்படி தெரியுமா?

0
2964
julie
- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் முழு நேர நடிகையாக மாறிவிட்டார். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அடிக்கடி எதாவது பதிவிட்டு ரசிங்கர்களிடம் வாங்கி காட்டிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ்சால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும் நிலையில், ஜூலி தனது புகைப்படத்தை பதிவிட்டு மக்களை பிஸியாக வைக்கப்போவதாக கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : ‘கப்பு முக்கியம் பிகிலே’ – வீட்டில் புட் பால் விளையாடி பிரியா பவானி ஷங்கர் பதிவிட்ட வீடியோ.

- Advertisement -

ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக செவிலியராக பணியாற்றி வந்தவர் தான். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் முழு நேர நடிகையாக மாறிவிட்டார்.தற்போது கொரோனா வைரஸ்சால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும் நிலையில், ஜூலி தனது புகைப்படத்தை பதிவிட்டு மக்களை பிஸியாக வைக்கப்போவதாக கூறி இருந்தார்.

ஆனால், ரசிகர்கள் சிலர், நீ புகைப்படத்தை பதவிடுவதற்கு பதிலாக நீ நர்ஸ் தானே போய் யாருக்காவது உதவலாமே என்று கேட்க, அதற்கு பதில் அளித்த ஜூலி, செவிலியர் பணி என்பது புனிதமான பணி. அதற்கு நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. மற்ற வேலைகளை போல செவிலியர் வேலையை சாதாரணமாக செய்துவிட முடியாது. அதேபோல ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்வது கடினம். சூட்டிங் காரணத்தால் வேலைக்கு தாமதமாக செல்ல வாய்ப்பிருக்கிறது. இதனால் நோயாளிகள் காத்துக் கொண்டிருக்க நேரிடும். நோயாளிகளின் வாழ்க்கையில் நான் விளையாட விரும்ப வில்லை என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : டிக் டாக்கில் இணைந்த ரம்யா. அவர் பதிவிட்ட முதல் வீடீயோவை பாருங்க.

-விளம்பரம்-

இந்தநிலையில் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஒரு செவிலியர் என்பதற்கு சான்றிதழ் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவை கண்ட பலரும் ஜூலியை ஆஹா ஓஹோ என்று வந்தார்கள். ஆனால், ஜூலி பதிவிட்டுள்ள இந்த சான்றிதழை யார் வேண்டுமானாலும் ஒரு பத்து கேள்விக்கு பதிலளித்து விட்டு பெற்றுக்கொள்ளலாம். மேலும், அந்த பத்து கேள்விக்கு நீங்கள் தவறாக பதில் அளித்தாலும் மீண்டும் மீண்டும் அந்த பத்து கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்து நீங்கள் இந்த சான்றிதழை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். intelycare covid 19 என்று கூகுளில் சர்ச் செய்து அதில் Covid -19 training course லிஸ்டில் இதை முயற்சி செய்து பாருங்க.

Advertisement