இது ஜூலியின் ‘ஊ சொல்றியா மாமா’ வெர்ஷன் – கடற்கரையில் ஜூலி வெளியிட்ட வீடியோ. (என்னடா இது சமந்தாக்கு வந்த சோதன)

0
892
julie
- Advertisement -

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

-விளம்பரம்-

ஜூலியும் ஹேட்டர்ஸ்களும் :

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன்.

இதையும் பாருங்க : 9 முறை அந்த சிகிச்சையை செய்து இருக்கிறேன். இன்னும் 7 முறை செய்ய வேண்டி இருக்கிறது – கேன்சர் பாதிப்பு குறித்து நடிகை உருக்கம்.

- Advertisement -

யாரும் பொய் சொல்லலையா :

இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை. இறுதியாக ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதில் இவருக்கு ஜோடியாக சென்ராயன் நடனமாடி இருந்தார்.

ஜூலியின் போட்டோஷூட் :

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி இந்த லாக்டவுன் சமயத்தில் நூற்றுக்கணக்கான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார். அதிலும் உடலில் மெழுகி உருக்கி சொட்டு சொட்டாக போட்டுகொண்டு உடலில் மெழுகு வர்த்தியை ஏற்றிக்கொண்டு இவர் நடந்திய போட்டோ ஷூட்டை கண்டு பலரும் இவரை கழுவி ஊற்றியதோடு, அட்வைசும் செய்ததனர்.

-விளம்பரம்-

ஜூலியின் ஊ சொல்றியா மாமா :

ஆனாலும், அம்மணி போட்டோ ஷூட்டை கைவிட்ட பாடு இல்லை. அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ட்ரெண்டிங் பாடலுக்கு எதாவது ரீல்ஸ் போட்டுவிடுவார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட் அடித்த ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ ஒன்றை போட்டுள்ளார் ஜூலி.

அந்த வீடியோவில் கவர்ச்சியான உடை அணிந்தபடி கடற்கரையில் விதவிதமான போஸ்களை கொடுத்து இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் ஜூலி, தன்னை தன்னுடைய காதலன் பணம் கேட்டு டார்ச்சர் செய்வதாக போலீசில் புகார் அளித்து இருந்தார். பின்னர் அவரை கூப்பிட்டு விவாசாரித்ததில் அவரை கழட்டிவிடவே ஜூலி அவரை பயம்புறுத்த புகார் அளித்து இப்பது தெரிய வந்தது.

Advertisement