9 முறை அந்த சிகிச்சையை செய்து இருக்கிறேன். இன்னும் 7 முறை செய்ய வேண்டி இருக்கிறது – கேன்சர் பாதிப்பு குறித்து நடிகை உருக்கம்.

0
838
hamsa
- Advertisement -

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் நான் ஈ. இறந்தவர் தன்னைக் கொன்றவரை பழி வாங்குவதற்காக ஈயாக மாறி மறுபிறவி எடுக்கும் கதை நான் ஈ. இந்த படத்தில் நானி, சுதீப், சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மிகப்பெரிய அளவில் இந்த படம் வெற்றியை கொடுத்தது. மேலும், இந்த படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தவர் நடிகர் ஹம்சா நந்தினி. இவர் தெலுங்கில் 20க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Eega (2012)

நான் ஈ பட நடிகை :

நான் ஈ படத்தில் வில்லன் சுதீப் உடன்பார்ட்டியில் இருக்கும் பெண்ணாக இவர் தோன்றி இருப்பார். மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பாலோ செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். இதனால் எப்போதும் அவரது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

- Advertisement -

பல மாதங்கள் கழித்து வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம் :

அதோடு அந்த புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று வரும். ஆனால், கடந்த சில மாதங்களாகவே இவர் எந்த ஒரு பதிவும்,புகைப்படமும் போடாமல் இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். இப்படி ஒரு நிலையில் ஹம்சா நந்தினி தலையில் சுத்தமாக முடி இல்லாமல் இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புற்று நோய் அறிகுறி :

அதோடு இவருக்கு கீமோ தெரபி காரணமாகத்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து ஹம்சா நந்தினி கூறியிருப்பது, எனக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு என்னுடைய மார்பகத்தில் ஒரு சின்ன கட்டி வந்தது. இதனால் என்னுடைய வாழ்க்கை முன்புபோல் இல்லாமல் மாறப்போகிறது என்று எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது. 18 வருடங்களுக்கு முன்பு என் அம்மாவும் ஒரு கொடிய நோய்க்கு பலியாகி விட்டார்.

-விளம்பரம்-

எடுத்துக்கொண்ட சிகிச்சை :

இதனால் நான் இருட்டில் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். இதனால் என் வாழ்க்கையில் பயம் அதிகமாகி விட்டது. பின் நான் கிளினிக் சென்று கட்டியை செக் செய்து கொண்டேன். அதன் பின் surgical oncologist மூலமாக பயாப்ஸி செய்ய வேண்டும் என சொன்னார்கள். அப்போது தான் எனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. மேலும், அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டி அகற்றப்பட்டது.

9 முறை கீமோதெரபி :

அதற்கு பிறகு எனக்கு அந்த மார்பக புற்று நோய் பரவல் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால், அது குறைந்த காலம் மட்டுமே மீண்டும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். அதன்பின் எனக்கு BRCA1 (Hereditary Breast Cancer) இருப்பதை உறுதி செய்தார்கள். அதற்கான சிகிச்சை மிகத் தீவிரமானது. நான் தற்போது வரை 9 முறை கீமோதெரபி செய்து இருக்கிறேன். இன்னும் 7 முறை செய்ய வேண்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் குணமடைந்து வரவேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Advertisement