என்ன தைரியம் இருந்தா என்ன அப்படி சொல்லுவ. ரசிகரின் கமன்ட்டால் கடுப்பான ஜூலி.

0
53474
julie
- Advertisement -

உயிரை எடுக்கும் இந்த கொரோனா வைரஸ் மக்களின் மனதில் உயிர் பயத்தை கிளப்பி உள்ளது. இந்தியாவில் கொரோனாவினால் 4485 பேர் பாதிக்கப்பட்டும், 129 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும் என்றும், கூட்டம் கூட கூடாது என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. கொரோனா விழிப்புணர்வு குறித்து பல பிரபலங்கள் சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிக்பாஸ் பிரபலம் ஜூலி அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர் நீ செத்துடு நாயே என்று அவரை தாறுமாறாக பேசி உள்ளார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

இதையும் பாருங்க :
24 மணி நேரத்தில் கிடைத்த வரவேற்பு. சகோதரிகள், அருண் விஜய் என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் டேக் செய்த வனிதா.

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஜூலி அவர்கள் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பது, இந்த கொரோனா மிக பெரிய ஆபத்து. தயவுசெய்து இதை யாரும் சாதாரணமாக நினைக்காதீர்கள். இதை நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தான் தடுக்க முடியும். ஒன்று சேர்ந்து என்றால் கைகோர்த்து இல்லை தனித்தனியாக இருந்தால் போதும்.

தயவுசெய்து காய்கறி வாங்கப் போறேன், மசாலா வாங்கப் போறேன் என்று கடைக்கு அடிக்கடி போகாதீர்கள். கடைக்கு சென்றால் மூன்று, நான்கு நாட்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து விடுங்கள். முக்கியமாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள். அந்த மாஸ்க்கை நாலு மணி நேரம் உபயோகித்து விட்டு தூக்கி போடுங்கள். தூக்கிப் போடும்போது அதை கிழித்து தூக்கி போடுங்கள்.

இதையும் பாருங்க : அருண் விஜய்யை என்னை பார்த்து கற்றுக்க சொன்னார். கௌதம் மேனன் பட வில்லன் பேட்டி.

-விளம்பரம்-

நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் அந்த மாஸ்க்கை எடுத்து பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால் மிகவும் கவனமாக இருங்கள். தங்களுடைய உயிரை கூட பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கும் நம் அரசு, போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள், நர்சுகள், சுகாதார துறையை சேர்ந்தவர்கள், நமக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் என எல்லோருக்கும் நன்றி. எல்லோரும் ஒன்று சேர்ந்து தனியாக இருந்து கொரோனாவை ஒழிப்போம் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவன் ‘இவ்ளோ கருத்தா பேசுறியே நாயே சாரி தாயி. நீ ஒரு சிஸ்டர் தானே சர்வீஸ்க்கு கிளம்பலாம் இல்ல. அப்படியாவது செத்து எங்களுக்கு நல்லது பண்ணி வீரத்தமிழச்சி’ என்று கமென்ட் போட்டு உள்ளார். அதை பார்த்த ஜூலி மிகவும் கோபமடைந்து ‘என்ன தைரியம் இருந்தால் செத்து போ என்று சொல்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நெட்டிசன் நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.

ஜல்லி கட்டு மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜீலி. இதன் மூலம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் வாங்கி வைத்த மொத்த பெயரும் ஓடி விட்டது. பின் ஜூலி சோசியல் மீடியாவில் என்ன மாதிரி கருத்து போட்டாலும் அதை கிண்டல் செய்வதற்கு என்றே ஒரு கும்பல் இருக்கிறது. கிண்டல் செய்கிறார்கள் என்று தெரிந்தும் தைரியமாக தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ஜூலி.

Advertisement