அருண் விஜய்யை என்னை பார்த்து கற்றுக்க சொன்னார். கௌதம் மேனன் பட வில்லன் பேட்டி.

0
1490
arunvijay

இளைஞர்களின் பேவரேட் இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த படம் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், கமலினி, டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். சஸ்பென்ஸ், திரில்லர், க்ரைம் ஜெர்மனியில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

10 Years of Vettaiyaadu Vilaiyaadu: Why missing Kamal Haasan's ...

- Advertisement -

கமல்ஹாசன் அவர்களின் திரை வரலாற்றிலேயே மிகப் பெரிய போலீஸ் படமாகவும் இது அமைந்தது. மேலும், இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் மீண்டும் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக கலக்கி இருந்தவர் டேனியல் பாலாஜி.

இதையும் பாருங்க : கொரோனாவிற்கு கோமியம் மருந்தா ? ரஷி கண்ணா சொன்ன விளக்கத்தை பாருங்க.

-விளம்பரம்-

இவர் வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசமாக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது கவுதம் மேனன்–கமல் கூட்டணியில் மீண்டும் வரும் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் டேனியல் பாலாஜி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

Raghavan (Vettaiyaadu Vilaiyaadu) Climax Scene - Kamal Hassan ...

இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் டேனியல் பாலாஜி இடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறியது, முதல் பாகத்திலேயே என்னை கொன்று விட்டார்கள். அதனால் இரண்டாம் பாகத்தில் எனக்கு வேலை இருக்காது என்று நினைக்கிறேன். தற்போது கவுதம் மேனன் அவர்கள் நிறைய பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கிறார். அதோடு அவரே படங்களில் நடிக்கவும் செய்கிறார். அதனால் எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு குறைவு தான்.

கவுதம் மேனனுக்கு ஒன்னு சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நான் ரெண்டு காட்சிகளில் நடித்தேன். ஆனால், அதில் இருந்து ஒரு காட்சியை எடுத்து விட்டு ஒன்று தான் வைத்தார்கள். அப்போது கவுதம் மேனன் அவர்கள் நடிகர் அருண் விஜய்யிடம் என்னுடைய உடல் மொழி, மேனரிசம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். மேலும், அவன் எப்படி பார்க்கிறான், எப்படி திரும்புகிறான் என்பதை கவனி என்றும் சொன்னார்.

இதையும் பாருங்க : இந்தியாவை விட்டு ஒழித்துக்கட்ட வேண்டிய இரண்டு விஷயங்கள். ஒன்று கொரானா மற்றொன்று ? அப்துல் காலிக் பதிவு.

அது ரொம்ப தவறான செயல். இந்த மாதிரி அவர் செய்ய கூடாது. ஒரு கேரக்டரை வேற மாதிரி புதியதாக தான் உருவாக்க வேண்டுமே தவிர அதே மாதிரி உருவாக்க கூடாது என்று கூறினார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி. தமிழ் சினிமாவில் இவர் முன்னணி குணச்சித்திரம் மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருகிறார். இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பிகில் போன்ற பல படங்களில் வில்லன் நடித்து உள்ளார்.

Advertisement