நர்ஸ் வேலையை பார்கிறீங்களா இல்லையா ? போன வருஷம் ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு. ஜூலியின் இரட்டை முகம்.

0
1012
julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் முழு நேர நடிகையாக மாறிவிட்டார். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அடிக்கடி எதாவது பதிவிட்டு ரசிங்கர்களிடம் வாங்கி காட்டிக்கொள்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜூலியை நர்ஸ் வேலையை ஏன் விட்டுவிடீர்கள் என்று கேட்டதற்கு செவிலியர் பணி என்பது புனிதமான பணி. அதற்கு நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. மற்ற வேலைகளை போல செவிலியர் வேலையை சாதாரணமாக செய்துவிட முடியாது.

- Advertisement -

அதேபோல ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்வது கடினம். சூட்டிங் காரணத்தால் வேலைக்கு தாமதமாக செல்ல வாய்ப்பிருக்கிறது. இதனால் நோயாளிகள் காத்துக் கொண்டிருக்க நேரிடும். நோயாளிகளின் வாழ்க்கையில் நான் விளையாட விரும்ப வில்லை என்று பதில் அளித்திருந்தார். ஆனால், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வேறு விதமாக பதில் அளித்துள்ளார் ஜூலி.

சமீபத்தில் ஜூலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர், நீங்க ஏன் நர்ஸ் வேலைக்கு போறது இல்ல. பிக் பாஸ்ல இருக்கும் போது அந்த வேலைய விட மாட்டேன்னு சொன்னீங்க என்று கேட்டாதர்க்கு, யாருக்குகெல்லாம் இந்த சந்தேகம் இருக்கிறதோ, நான் தற்போதும் அவரச நேரத்தில் மட்டும் செவிலியர் பணியை பகுதி நேர வேலையாக செய்கிறேன். நான் அதை முழு வேலையாக செய்ய முடியாது என்பதால் இப்படி செய்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த கண்டு செவிலியர் தொழிலை விட்டுவிட்டதாக கூறிய ஜூலி தற்போது அதை பகுதி நேரமாக செய்து வருவதாக கூறியுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement