ராஜகோபாலன் சார் மீது நடவடிக்கை எடுக்காதீங்க, அந்த பசங்க என்ன குழந்தையா – வக்காலத்து வாங்கிய BJP பிரபலம். கிழிததெடுத்த ஜூலி.

0
150259
julie
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபாலன் என்ற அந்த ஆசிரியர், மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-

23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில் இந்த சர்ச்சை சமூக வலைதளத்தில் வெடிக்க ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் பாருங்க : யூடுயூப் மன்னன் சாப்பாட்டு ராமனுக்கு இனி ஜெயிலில் தான் சாப்பாட்டு – காரணம் அவர் வெளியிட்ட இந்த வீடியோ தான்.

- Advertisement -

இந்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் PSBB பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கூறி வரும் நிலையில் பிஜேபியை சேர்ந்த நாராயணன் சுப்ரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில், தயவுசெய்து இராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள். இந்த காலத்தில் சிறார்கள் யாரும் சிறுவர்கள் கிடையாது. அவர்கள் நெட் பிலிக்சில் அடல்ட் படங்களை பார்க்கின்றார்கள். எனவே, உண்மையை கண்டறிய பாருங்கள் தகுந்த ஆதாரமில்லாமல் ராஜகோபாலனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த பதிவை பகிர்ந்த ஜூலி, நீ எல்லாம் நிஜமாவே மனுஷ ஜென்மம் தானா. உன் சொந்த பொண்ண பண்ணுனா சும்மா இருப்பியா. இதுல அந்த கேவலமான பிறவிக்கு சார் பட்டம் வேற. டேய், அவன் என் கையில கிடைச்சா வெட்டிப் போடுவேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் ஜூலி.

-விளம்பரம்-
Advertisement